கொரோனா தொற்று

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

🔲தமிழகத்தில் ஏற்கெனவே திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். மேலும் செஞ்சி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டு சிசிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார்.

🔲இதேபோல அதிமுக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

🔲கொரோனா உறுதியான நிலையில், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Related posts

Leave a Comment