பற்றாக்குறையில் பரிசோதனை ‘கிட்’ முடிவுகள் அறிவிப்பில் தாமதம்

விருதுநகர்:விருதுநகரில் நிலையில் பரிசோதனை கிட் தேவையான அளவு இல்லாமல் கொரோனா முடிவுகள் அறிவிப்பில் தாமதமாகிறது. இங்குள்ள மருத்துவமனையில் ஆர்.டி.பி.சி.ஆர்., மூன்று மிஷன்கள் மூலம் தினமும் 842 மாதிரிகளை பரிசோதிக்கப்படுகிறது. இதன் முடிவு தெரிய 18 முதல் 24 மணி நேரமாகிறது.

பரிசோதனைக்கான கிட் தேவையான அளவு கையிருப்பில் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இதிலும் பற்றாக்குறை உள்ளது. மாவட்டத்தில் 12 மருத்துவமனைகளில் இருந்து தினமும் 800 முதல் 1000 சளி மாதிரிகள் விருதுநகர் அனுப்பப்படும் நிலையில்,தொற்று வேகமாக பரவுவதாலும் பரிசோதனை கிட் குறைந்தளவே கையிருப்பில் உள்ளதாலும் பரிசோதனை முடிவுகள் தெரிய தாமதமாகிறது.

தனிமையில் இருப்பவர்கள் முடிவு தெரியாது ஆறு நாட்களுக்கு மேலாக பரிதவிக்கின்றனர். இதை தவிர்க்க கூடுதல் ஆர்.டி.பி.சி.ஆர்., மிஷன்கள், பரிசோதனை கிட், தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

Related posts

Leave a Comment