பாழடிக்கிறாங்க ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பின் பிடியில் கண்மாய்கள் நிரந்தர தீர்வுக்கு வழி காணாததால் விவசாயிகள் சோகம்

ராஜபாளையம்: மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் பொருட்டு கண்மாய் மராமத்து பணிகள் நடந்தாலும் ஆகாய தாமரைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வழிமுறைகளை இது நாள் வரை செயல்படுத்தாமல் உள்ளதால் விவசாயிகள் பாதிக்கின்றனர்.

ஒவ்வொரு பகுதியிலும் நீர்வள ஆதாரத்திற்கு முக்கிய காரணியாக உள்ளன கண்மாய்கள் . ஆண்டாண்டு காலமாக நம் முன்னோர்கள் எதிர்கால சந்ததியினரை காக்கும் பொருட்டு தொலை நோக்கு திட்டமாக ஏற்படுத்தப்பட்ட இக்கண்மாய்கள் காலப்போக்கில் பராமரிப்பின்றி காணாமல் போகின்றன. இதை நம்பி இருந்த விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

பொதுப்பணித்துறை , ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்கள் பல துார் வாரப்பட்டாலும் இவற்றில் சேரும் கழிவு நீரால் பெரும்பாலான கண்மாய்களில் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்து நீரை விரயமாக்குகின்றன.ஒவ்வொரு முறையும் கோடை காலங்களில் கருகும் இவை மீண்டும் துளிர் விட்டு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மராமத்து பணியின் போது அகற்றினாலும் மீண்டும் அசுர வேகத்தில் வளர்கின்றன. தண்ணீர் தேங்குவதிலும் சிக்கல் உள்ளது. இதை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது.

Related posts

Leave a Comment