UPSC Recruitment 2020: மத்திய அரசின் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) சார்பில் பல்வேறு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

UPSC Recruitment 2020: மத்திய அரசின் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! உதவி செயலாளர், ஆராய்ச்சி அதிகாரி என மொத்தம் 9 பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

யுபிஎஸ்சி பணி விபரங்கள்: தற்போது யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் உதவிச் செயலாளர் – 01, ஆராய்ச்சி அதிகாரி – 01, விஞ்ஞானி சி – 03, விஞ்ஞானி பி- 01, நூலக உதவியாளர் – 03 என மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணை அனைத்தும் மத்திய அரசிற்கு உட்பட்ட வேறு வேறு துறையில் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

வயது வரம்பு : மேற்குறிப்பிட்ட உதவிச் செயலாளர் பணிக்கு விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அதேப் போன்று ஆராய்ச்சி அதிகாரி பணிக்கு 35, விஞ்ஞானி – சி மற்றும் விஞ்ஞானி – பி பணிக்கு 40, நூலக உதவியாளர் மற்றும் தகவல் அதிகாரி பணிக்கு 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஆராய்ச்சி அதிகாரி பணிக்கு M.A Economics, M.Sc Mathematics, M.A Sociology, M.A Social Work, விஞ்ஞானி – சி பணிக்கு B.E Civil Engineering, M.E Hydrology and Water Resources Engineering, M.Sc Geology, விஞ்ஞானி – பி பணிக்கு எம்.எஸ்சி, பிஇ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள், நூலக உதவியாளர் மற்றும் தகவல் அதிகாரி பணிக்கு ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மேற்குறிப்பிட்ட யுபிஎஸ்சி-யின் அனைத்துப் பணியிடங்கள் குறித்த விபரங்களுக்கு https://www.upsc.gov.in/sites/default/files/Advt-06_2020-Eng_0.pdf அல்லது https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.பிப் என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.upsc.gov.in இணையதளம் மூலம் 30.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மேலே உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களுக்கு மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.upsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ தளத்தைக் காணவும்.

Related posts

Leave a Comment