கத்தரிக்காயில் மருத்துவ குணங்கள் ஏராளம்

அருப்புக்கோட்டை :உணவின் போதும் நாம் பல வகை கீரைகள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது வழக்கம். இதில் கத்தரிகாயும் அடங்கும் . இதை உட்கொண்டால் செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்சத்து அதிகரிக்கிறது. இதய தசைகள் வலுப்பெற்று இதயம் சம்பந்தாமன நோய்கள் வருவதில்லை. சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்கள் பக்குவமாக சமைத்து சாப்பிட்டால் கற்கள் கரையும். மூல நோயை தடுக்க வல்லது. நுரையீரல் துாய்மை அடையும். உடல் பருமனையும் குறைக்கிறது.

இத்தனை மருத்துவ குணம் கொண்ட கத்தரிக்காய் அருப்புக்கோட்டை அருகே கல்லகாரி, புரசலுார், கீழ்க்குடி, பூலாங்கால், வாகைகுளம் உட்பட கிராமங்களில் 200 ஏக்கரில் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் கத்தரிக்காய் ‘வயலட்’ கலரில் நல்ல சுவையுடன் உள்ளது. தினமும் கேரளாவிற்கு 35 கிலோ கொண்ட சிப்பம் (100 மூடைகள்) அனுப்பப்படுகிறது. கேளாவில் இந்த வகை கத்தரிக்காய்களுக்கு நல்ல ‘கிராக்கி’ உண்டு. கொரோனா ஊரடங்கால் அங்கு அனுப்ப முடியாது கத்தரிகாய்கள் தேக்கமடைவதால் கிலோ ரூ.2 க்கு விற்கின்றனர். இதிலும் பேரம் பேசுவதால் விலை போகாமல் தேங்கி கிடக்கிறது. இவை தற்போது ஆடு, மாடுகளுக்கு இரையாகின்றன.

Related posts

Leave a Comment