கவனிக்கலாமேஇருண்ட நிலையில் கிராம சந்திப்பு ரோடுகள்

ஸ்ரீவில்லிபுத்துார்:மாவட்டத்தில் மெயின்ரோட்டுடன் கிராம ரோடுகள் இணையும் சந்திப்பு பகுதிகளில் மின்விளக்குகள் வசதி இல்லாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. வாகனங்கள் ரோட்டை கடக்கும்போது விபத்து அபாயம் உள்ளது. இதை தவிர்க்க உள்ளாட்சி நிர்வாகங்கள் கவனம் கொள்ள வேண்டும்.

இங்கு நான்குவழிசாலை, கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை , ஸ்ரீவில்லிபுத்துார்-பார்த்திபனுார் மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. இதை சார்ந்து பல்வேறு கிராமங்களின் ரோடுகளும் இணைகிறது. கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு தினமும் ஏராளமானோர் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர்.

தற்போது ஊரடங்கால் பஸ் போக்குவரத்து இல்லாததால் பால் விற்போர், விவசாய தொழிலாளர்கள் , நகர வியாபாரிகள் விளை பொருட்களுடன் மிகுந்த சிரமத்துடன் மெயின் ரோட்டிலிருந்து கிராம ரோடுகளில் பயணித்து வருகின்றனர். இவ்வாறு இணையும் பகுதிகளில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் அதிகாலை , இரவு நேரங்களிலும் ரோட்டை கடக்கும்போது விபத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது.

இதை கருத்தில் கொண்டு கிராம ரோடு சந்திப்புகளில் போதிய மின்விளக்குகள் அமைக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் முன வர வேண்டும். இதுவும் அவசியமே பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வசிக்கும் கிராம மக்கள் நகரங்களுக்கு டூவீலர்கள், சைக்கிள்களில்தான் பயணிக்கின்றனர்.

மெயின்ரோட்டுடன் இணையும் பகுதி ரோடுகள் மிகவும் குறுகலாக , மின்விளக்குள் இன்றி இருப்பதால் இரவு நேரங்களில் இருளால் வீடுதிரும்ப அவதியடைகின்றனர். மாவட்டத்தின் அனைத்து கிராம சந்திப்பு ரோடுகளில் அதிக வெளிச்சம் தரும் மின் விளக்குகள் அமைக்கவேண்டும்.

-செல்வகுமார், ரோட்டரி தலைவர், ஸ்ரீவில்லிபுத்துார்.

Related posts

Leave a Comment