தமிழகத்தில் இன்று முழு கட்டுப்பாடுகளுடன் தீவிர ஞாயிறு லாக்டவுன்

சென்னை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று முழு கட்டுப்பாடுகளுடன் தீவிர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் மார் 25-ல் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து லாக்டவுனில் தளர்வுகளும் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

தற்போது 6-ம் கட்ட லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளுமே முழு கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் ஞாயிறுதோறும் எந்த தளர்வுமே இல்லாத வகையில் முழு கட்டுப்பாட்டுடன் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றும் தமிழகம் முழுவதும் மருந்து கடைகள், பால் விநியோகம் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கின்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றே மளிகைப் பொருட்கள், இறைச்சி உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்கி வைத்தனர். இதனால் நேற்று மளிகை கடைகள், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சட்டவிரோதமாக இறைச்சி விற்பனை நடைபெறுவதா? என்பது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related posts

Leave a Comment