பற்றாக்குறையில் ஆம்புலன்ஸ் தொற்று பாதித்தோரை அழைத்து வருவதில் சிரமம்

விருதுநகர்:மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கண்டறியப்பட்டவர்களை அழைத்து வருவதில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் சிரமம் ஏற்படுகிறது.

தினசரி 150 லிருந்து 200 பேருக்கு தொற்று உறுதியாகிறது. இவர்களை அழைத்து வர 5 ஆம்புலன்ஸ்களே உள்ளதால் அனைவரையும் உடனடியாக அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று 284 பேருக்கு தொற்று உறுதியாக 50க்கு குறைவானோரோ அழைத்து வரப்பட்டனர். மற்றவர்களை குறிப்பிட்ட இடத்தில் ஒருங்கிணைத்து நிற்குமாறு சுகாதார ஆய்வாளர்கள் கூறுவதால் அங்கேயே காத்திருக்கின்றனர்.

இவர்களால் அக்கம் பக்கத்தினர் அஞ்சுகின்றனர். இதுவும் தொற்று பரவலுக்கு காரணமாகிறது. கலெக்டர் கண்ணன்:ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.

Related posts

Leave a Comment