மனிதர்களுக்கு சோதனை முயற்சியாக நாளை முதல் எய்ம்ஸ்-ன் கொரோனா தடுப்பூசியான கோவேக்சின்

டெல்லி: மனிதர்களுக்கு நாளை முதல் சோதனை முயற்சியாக கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 14,422,471 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 604,823 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 8,611,657 பேர் குணமடைந்தும் உள்ளனர். உலக நாடுகள் அனைத்துமே கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் படுதீவிரமாக இருக்கின்றன.

இந்தியாவில் எய்ம்ஸ், கொரோனா தடுப்பூசியாக கோவேக்சினை உருவாக்கி உள்ளது. இந்த கோவேக்சினை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்த எய்ஸ்ம் நெறிமுறை குழு அனுமதி வழங்கி உள்ளது. இதனடிப்படையில் நாளை முதல் மனிதர்களுக்கு எய்ம்ஸ் கொரோனா தடுப்பூசி மருந்து சோதனை மேற்கொள்ள உள்ளது.

Related posts

Leave a Comment