வென்றவர்களுக்கு பாராட்டு

விருதுநகர்:விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் காமராஜரின் பிறந்தநாள் விழா நடந்தது. செயலாளர் ஸ்ரீமுருகன் தலைமையில் பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா போட்டிகள் நடந்தன. போட்டிகளை நுண்கலைமன்ற ஒருங்கிணைப்பாளர் லுானா யூனிஸ், கல்லுாரி ரோட்டராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் சக்திராஜ் ஒருங்கிணைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பொருளாளர் பெரியசாமி, கல்லுாரி முதல்வர் அனந்த் ஆச்சாரி, துணை முதல்வர் வசந்தி பாராட்டினர்.

Related posts

Leave a Comment