தென்ஆப்பிரிக்காவில் புதுமையான கிரிக்கெட்: டி வில்லியர்ஸ் அணிக்கு தங்கப்பதக்கம்

தென்ஆப்பிரிக்காவில் நடந்த புதுமையான கிரிக்கெட் போட்டியில் டிவில்லியர்ஸ் தலைமையிலான ஈகிள்ஸ் அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது.

கொரோனாவின் சீற்றத்தால் தென்ஆப்பிரிக்காவில் விளையாட்டு போட்டிகள் முற்றிலும் முடங்கி விட்டது. நிலைமை ஓரளவு சீரடைந்து வரும் நிலையில் கொரோனா பாதிப்புக்கு நலநிதி திரட்டுவதற்காக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 3டிசி என்ற பெயரில் புதுமையான கிரிக்கெட் போட்டியை நடத்த ஏற்பாடு செய்தது. இந்த ஆட்டம் செஞ்சூரியனில் நேற்று நடந்தது.
டி வில்லியர்ஸ் தலைமையில் ஈகிள்ஸ் அணியும், டெம்பா பவுமா தலைமையில் கைட்ஸ் அணியும், ரீஜா ஹென்ரிக்ஸ் தலைமையில் கிங்பிஷர்ஸ் அணியும் பங்கேற்றன. முதலில் குயின்டான் டி காக், ரபடா ஆகியோரும் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் அவர்கள் சொந்த காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகி விட்டது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு அணியிலும் 8 வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். மொத்தம் 36 ஓவர் அடிப்படையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிக்கு எதிராக தலா 6 ஓவர் வீதம் விளையாட வேண்டும். பந்து வீச்சாளர் தலா 3 ஓவர் வீசிக்கொள்ளலாம்

இதன்படி ஒவ்வொரு அணியும் 12 ஓவர் விளையாடி முடித்த பிறகு யார் அதிக ரன்கள் குவித்து இருக்கிறார்களா? அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். டாப்-2 அணிகள் சரிசம ரன்கள் எடுத்திருந்தால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படும்.

Related posts

Leave a Comment