உடல் வெப்பம், வயிற்று வலி சீராகுது

விருதுநகர்:வேர் முதல் நுனி வரை அனைத்து பாகங்கள் மூலமாகவும் பயன்தரும் மரங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக வாழை, பனை போன்ற மரங்கள் மருத்துவ, வணிக ரீதியாக சக்கைபோடு போடுகின்றன. இவற்றிற்கு இணையாக தென்னை மரங்களும் பல பயன்களை தருகிறது.தென்னை மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தவை. இதன் குருத்துப்பகுதி பலரால் அறியப்படு வதில்லை. இனிப்பு, துவர்ப்பு கலந்த ஒரு கலவையான சுவையில் இது காணப்படும்.

நீண்ட நாள் வயிற்று வலியால் அவதிப்படுவோருக்கு இது அருமருந்து. மருத்துவ சிகிச்சையோடு குருத்தையும் தொடர்ந்து உண்டு வந்தால் சிறுநீரக கற்களும் கரைந்து விடும். இன்றைய இளைஞர்களுக்கு உடல் உஷ்ணம் பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது. தினசரி காலை இதை உண்டால் வெப்பநிலை சீராகும். பெண்களுக்கு மாதவிடாய் சம்மந்தமான அனைத்து பிரச்னைகளும் குருத்து, தென்னம்பூ தீர்த்து வைக்கின்றன.

விருதுநகரில் ரோட்டோரங்களில் ரூ.10 முதல் கிடைக்கிறது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் உண்ணக்கூடிய தென்னம்பாலை போன்ற வற்றையும் விற்பனை செய்கின்றனர். தென்னங்குருத்தின் மகிமை அறிந்து வெளிநாட்டினர் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கொடுத்து வாங்கி செல்கின்றனர். நாமும் உள்ளூர் மரத்தின் மருத்துவ மகிமையை உணர்ந்து தேவைக்கேற்பே குருத்தக்களை வாங்கி உண்போமே.

Related posts

Leave a Comment