தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா.. சென்னையில் 1,130 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூலை மாத தொடக்கத்தில் தினமும் 4000 பேருக்கு கொரோனா என இருந்த நிலையில் பின்னர் சில நாட்களில் 3000 என குறைந்தது. இதையடுத்து தற்போது தினமும் 4000 கேஸ்கள் வருகின்றன. அந்த வகையில் இன்று தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறித்த அறிக்கை சுகாதாரத் துறையினரால் வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் இன்று மேலும் 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,80,643 ஆக உயர்ந்தது.

20 லட்சம் சேம்பிள்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,344 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 51,066 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 20 லட்சம் சேம்பிள்கள் சோதனைக்குள்படுத்தப்பட்டுள்ளன.

டிஸ்சார்ஜ் இன்று மட்டும் 50,055 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அது போல் இதுவரை 19,56,672 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று 3,010 ஆண்களுக்கும் 1,955 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. இன்று 4,894 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றுள்ளார்கள்.

குணமாகியவர்கள் இதுவரை 1,26,670 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடுகளுக்கு சென்றுள்ளனர். இன்று மட்டும் 75 பேர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டனர். இதுவரை தமிழகத்தில் 2,626 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் நாள்தோறும் 2000-த்தை தொட்ட கொரோனா அண்மைக்காலமாக 1500-க்கு கீழ் உள்ளது.

அதிகபட்ச இறப்பு இன்று சென்னையில் 1130 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 88377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரையில் சென்னையில் அதிகபட்சமாக 1475 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்கள். தமிழகத்தை பொருத்தமட்டில் இன்று விருதுநகரில் 360 பேருக்கும் திருவள்ளூரில் 366 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 262 பேருக்கும் செங்கல்பட்டில் 256 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment