ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா உறுதி – தொடர்பில் இருந்தவர்கள் கிலி

ராஜபாளையம்: திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினரை சந்தித்தவர்கள் தாமாக வந்து கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த தங்கபாண்டியன் உள்ளார். இவரது மகளுக்கு கடந்த மாதம் தளவாய்புரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. வெளி மாவட்டங்களில் இருந்தும் பல அரசியல் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த பின் மதுரையில் உள்ள மணமகன் வீட்டில் நடந்த விசேசங்களுக்கு சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தவிர குடும்பத்தினருக்கு கடந்த மாதம் 28ம் தேதி மனைவி கலாவதி,46 மற்றும் இரண்டு மகன்களுக்கு இராமர், 23, லட்சுமணன்,23 உட்பட குடும்பத்தினர் மற்ற மூவருக்கும் கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இந்நிலையில் மூவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் எம்எல்ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் தற்போது அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. இதனையடுத்து எம்எல்ஏ தற்போது குடியிருந்து வரும் குடியிருப்பு பகுதிகளில் அரசு சார்பில் செட்டியார்பட்டி பேரூராட்சி நிர்வாகம் கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்தி வருகின்றனர்.

எம்எல்ஏ தங்கப்பாடியன் தனது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தன்னை தானே தனிமை படுத்திக் கொள்ளாமல் தனது தொழில் நிறுவனத்திற்கும் ஊரில் கட்சிப் பிரமுகர்களை சந்தித்து வந்துள்ளார். தற்போது கொரோனா உறுதியாக உள்ளதால் திமுக கட்சியினர் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். மேலும் சுகாதாரத்துறையினர் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்தவர்கள் தாமாக வந்து கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

Leave a Comment