Dr.C.Vijayabaskar

Plasma Bank at Rajeev Gandhi Govt General Hospital, Chennai. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவுடன் கோவிட்டிற்கான பிளாஸ்மா சிகிச்சை வெற்றியை அடிப்படையாகக் கொண்டு முதலாவது பிளாஸ்மா வங்கி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூபாய் 2.34 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டு இன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 30 நிமிடத்தில் 7 நபர்களிடமிருந்து தலா 500 மி.லி. பிளாஸ்மாவை கொடையாக பெறுவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.கோவிட் 19 லிருந்து குணமடைந்த நோயாளிகள் 14 நாட்களுக்கு பிறகு பிளாஸ்மா தானம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இணை நோய்கள் உள்ளவர்கள் பிளாஸ்மாவை தானம் செய்ய கூடாது. பொதுமக்கள் எவ்வித பயமும் அச்சமும் இன்றி தாமாகவே முன்வந்து உயிரை காப்பாற்ற பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.தமிழ்நாடு அரசு கோவிட் பிளாஸ்மா வங்கிகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்,சேலம் திருச்சி கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் பிளாஸ்மா வங்கிகள் ஏற்படுத்தப்படும்.#Plasmabank#Covid19#RGGGH#TNGovt#Vijayabaskar

Related posts

Leave a Comment