மம்சாபுரத்தில் தரமான, இயற்கையான முறையில் வெல்லம் தயாரித்தல்

அனைவருக்கும் வணக்கம் .. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் கிராமம்…. என்னோட சொந்த ஊர் மம்சாபுரம் தான். இங்கே உள்ள இயற்கை அழகை வருணிக்க வார்தைகளே இல்லைனு தான் சொல்ல முடியும் … ஸ்ரீவில்லிபுத்தூர்ல இருந்து மேற்கு நோக்கி ஒரு 5 km வந்தாலே எங்க ஊர் வந்துரும், இங்க எங்க ஊர் ல முக்கிய தொழிலே விவசாயம் தான், நெல் , கரும்பு , பருத்தி, நெல்லிக்காய், எலுமிச்சை, தேங்காய் , நுங்கு , பதநீர் , கருப்பட்டி, வெல்லம் , பனங்கிழங்கு, மாம்பழம் ( சப்பட்டை, பஞ்சவர்ணம், கல்லாமை ) னு எல்லாம் விவசாயத்தை நபியே இருக்குற அழகான ஒரு சொர்கம் னே சொல்லலாம் … இப்போ நாம நாட்டு கரும்பு ல இருந்து வெல்லம் தயாரிக்குறதை பாக்க போறோம்… மம்சாபுரம் ல இருந்து மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரம் போகுற பாதைல நிறைய கரும்பு காடு, கரும்பு ஆலைகள் இருக்கு… அதுல ஒரு ஆலை ல எப்பிடி கரும்பு சாறு ல இருந்து வெல்லம் வருது னு படி படியா விளக்கமா வீடியோ ல காண்பிச்சு இருக்கேன் … இப்போது உள்ள தலைமுறை , அதாவது 2000 கு அப்புறம் பிறந்து பட்டணத்தில் வளரும் குழந்தைகளுக்கு இயற்கை இனிப்பு பற்றி தெரிவது இல்லை, எப்பிடி தயார் பண்றாங்க அப்பிடினும் தெரிவது இல்லை .. முக்கியமாக அதற்காக தான் இந்த வீடியோ. இக்கால குழந்தைகள் நாட்டு வெல்லம் தயாரிப்பு முறையை தெரிந்து கொண்டு , செயற்கை சீனி போன்றவற்றை உண்ணாமல், நலமோடு வாழவே இந்த குறும்படம் .. மீண்டும் அடுத்த வீடியோவில் சந்திப்போம் .. இப்படிக்கு மம்சாபுரத்தில் இருந்து உங்கள் இயற்கை ஆர்வலர் “கணேஷ்குமார் செல்லமுத்து”… வீடியோ பிடித்து இருந்தால் லைக் பண்ணுங்க, மேலும் வீடியோக்களை பார்க்க மறக்காமல் நமது சேனல் Beautiful Mamsapuram – Subscribe பண்ணுங்க. உங்கள் கருத்துக்களை Comment பண்ணுங்க… நன்றி. வணக்கம் .

Related posts

Leave a Comment