Shenbagathoppu to Mamsapuram

அனைவருக்கும் வணக்கம் .. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் கிராமம்…. என்னோட சொந்த ஊர் மம்சாபுரம் தான். இங்கே உள்ள இயற்கை அழகை வருணிக்க வார்தைகளே இல்லைனு தான் சொல்ல முடியும் … ஸ்ரீவில்லிபுத்தூர்ல இருந்து மேற்கு நோக்கி ஒரு 5 km வந்தாலே எங்க ஊர் வந்துரும், இங்க எங்க ஊர் ல முக்கிய தொழிலே விவசாயம் தான், நெல் , கரும்பு , பருத்தி, நெல்லிக்காய், எலுமிச்சை, தேங்காய் , நுங்கு , பதநீர் , கருப்பட்டி, வெல்லம் , பனங்கிழங்கு, மாம்பழம் ( சப்பட்டை, பஞ்சவர்ணம், கல்லாமை ) னு எல்லாம் விவசாயத்தை நபியே இருக்குற அழகான ஒரு சொர்கம் னே சொல்லலாம் … இப்போ நாம மேற்குதொடர்ச்சி மலை அடிவாரம் ல இருக்குற மாமர தோப்புகள் , தென்னை தோப்புகள் பத்தி தான் நாம வீடியோல பாக்க போறோம் .. ஆமாங்க இங்க இருக்குற மாம்பழத்தின் சுவையை நீங்க சாப்பிட்டீங்கனா உங்களால வாழ்நாள் வரைக்கும் சுவையை மறக்க முடியாது.. அவ்வளவு சுவையா இருக்கும். சப்பட்டை, பஞ்சவர்ணம், கல்லாமை மாம்பழம் னு எங்க ஊர் ல மூணு வகையான மாம்பழம் வகை இருக்கு .. ஒருமுறை ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தீங்க னா மறக்காம மம்சாபுரம் வந்து இயற்கை அன்னையின் விருந்தை சாப்பிட்டு போங்க … மீண்டும் அடுத்த வீடியோவில் சந்திப்போம் .. இப்படிக்கு மம்சாபுரத்தில் இருந்து உங்கள் இயற்கை ஆர்வலர் “கணேஷ்குமார் செல்லமுத்து”… வீடியோ பிடித்து இருந்தால் லைக் பண்ணுங்க, மேலும் வீடியோக்களை பார்க்க மறக்காமல் நமது சேனல் Beautiful Mamsapuram – Subscribe பண்ணுங்க. உங்கள் கருத்துக்களை Comment பண்ணுங்க நன்றி. வணக்கம் .

Related posts

Leave a Comment