ஐடி ஊழியர்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. திறன் உள்ளவர்களுக்கு வாய்ப்பு அதிகம் உண்டு..!

நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த நிலையில், இன்னும் அது எவ்வளவு தான் மக்களை கொள்ளையடிக்க போகிறதோ தெரியவில்லை. இப்படி ஒரு புறம் மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் பல துறைகளில் வேலையிழப்பிற்கும் வழி வகுத்துள்ளது. இது சர்வதேச அளவில் தனது சேவையினை வழங்கி வரும் ஐடி நிறுவனங்கள் ஒரு புறம் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில், சில நிறுவனங்கள் செலவினங்களை குறைப்பதற்காக பணி நீக்கம், சம்பள குறைப்பு என பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் இன்று வெளியான ஒரு செய்தியில் ஐடி துறையானது நிச்சயம் வளர்ச்சி காணும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறுகிறது. இது குறித்து தான் இந்தக் கட்டுரையில் பார்க்க போகிறோம்.

திறன் உள்ளவர்களுக்கு தேவை அதிகரிக்கும் இதற்கிடையில் ஐடி துறையில் பணி நீக்கம், வேலையிழப்பு இருந்தாலும், வரும் காலத்தில், திறன் உள்ளவர்களுக்கான தேவை அதிகரிகிகும் என்கிறது ஓர் அறிக்கை. இது குறித்து வெளியான இடி செய்தியில், சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கத்தினால் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

சிறந்த வாய்ப்புகள் ஆனால் இதில் நடந்த நல்ல விஷயம் என்னவெனில், பல இந்திய நிறுவனங்கள் தங்களது சேவை தரத்தினை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இது வழிவகுக்கும். வெளிநாட்டு தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்கு திரும்பிய பன்னாட்டு நிறுவனங்கள் பெருகிய முறையில் சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பிக்கலாம். அவை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு பதிலாக அதன் சிறந்த வாய்ப்புகளை இங்கே காணலாம் என்றும் கூறியுள்ளது

ஐடி துறையில் வளர்ச்சி காணும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குள் நாட்டின் தொழில்நுட்ப துறையானது சரியான உள்கட்டமைப்பை உருவாக்க தயாராக இருந்தால், இந்தியா தகவல் தொழில் நுட்ப பொருட்களின் சப்ளையர் மட்டும் அல்ல. டிஜிட்டல் கண்டுபிடிப்பு மற்றும் மூலோபாயத்தின் உலகளாவிய தலைவர்களில் ஒருவராக மாறக்கூடும் என்று கூறுகிறது இந்த அறிக்கை.

டிஜிட்டல் தேவை அதிகரிப்பு உலகெங்கிலும் உள்ள சில நிறுவனங்களில் பணி நீக்கம் என்பது இருந்தாலும், நல்ல திறன் உள்ளவர்களுக்கான தேவையானது நிச்சயம் அதிகரிக்கும். கொரோனாவின் காரணமாக ஐடி துறையில் சற்று பாதிப்புகள் இருந்தாலும், முன்னெப்போதும் விட, அதிநவீன டிஜிட்டல் சேவைகளுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு.

வளர்ச்சி கண்டு வரும் டிஜிட்டல் மயம் கொரோனா சில்லறை விற்பனையை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. ஆக இது ஐடி நிறுவனங்களுக்கு ஒரு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகின்றது. ஆக இதுபோன்று பல துறைகளில் டிஜிட்டல் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக ஐடி துறையானது சற்று பாதிக்கப்பட்டிருந்தாலும், மறுபுறம் இதுபோன்ற ஐடி சார்ந்த துறைகளில் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது. இது ஏற்கனவே வெளி நாடுகளீல் வளர்ச்சி காண ஆரம்பித்து இருந்தாலும், நிச்சயம் இது இந்தியாவில் தற்போது தான் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.

Related posts

Leave a Comment