தனிமைப்படுத்தோருக்கு சேவைக்குழு: விருதுநகரில் நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு

விருதுநகர்: கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உதவ விருதுநகர் நகராட்சி நிர்வாகம் சேவைக்குழுவை ஏற்படுத்தி உதவி செய்கிறது.

இங்குள்ள அண்ணாமலை செட்டியார் தெரு, பர்மா காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வெளியில் செல்ல , நுழைய இயலாதபடி போலீசார் கண்காணிக்கின்றனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு உதவ சுகாதார ஆய்வாளர் செந்தில் ஆண்டவர் தலைமையில் சேவை குழுக்களை கமிஷனர் பார்த்தசாரதி அமைத்துள்ளார். காய்கறி, மளிகை, மருந்து உள்ளிட்டவைகளை வாங்கி தர இக்குழு உதவுகிறது

Related posts

Leave a Comment