110 ஆண்டு பாரம்பரியம் மிக்க கிராமத்து பள்ளி

அருப்புக்கோட்டை:ஒரு மாணவர் நன்கு படித்து முன்னேறினால், மாணவனால் பள்ளிக்கு பெருமை, பள்ளியால் மாணவனுக்கும் பெருமை.

அந்த காலத்தில், தங்கள் குழந்தைகளுக்கு படிப்பறிவு அவசியம் வேண்டும் என்று நம் முன்னோர்கள் நினைத்தால், ஊர்கள் தோறும் பள்ளிகளை அமைத்தனர். வசதிபடைத்த பலர் தங்கள் ஊரில் பள்ளிகளை கட்டி தங்கள் ஊர் குழந்தைகளுக்கு கல்வி அறிவு பெற பாடுபட்டனர். அதில் நுாறாண்டு கண்ட பல பள்ளிகளும் ஏராளம்.

அந்த வகையில் அருப்புக்கோட்டை அருகே கடம்பன்குளம் கிராமத்தில் 1910 ல் ஆங்கிலேயர் காலத்தில் கிராம மக்களால் பள்ளி துவங்கப்பட்டது.’கிங் ஜார்ஜ் 5 கார்னேசன் பள்ளி’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 1939 ல் 5 ம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்டது. பின்னர், இந்த பள்ளி கிராம மக்களால் இந்து நடுநிலை பள்ளியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 1969ல் நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது,

இந்த பள்ளிக்கு அப்போது முதல்வராக இருந்த காமராஜர் 4 முறை வந்துள்ளார் என்ற பெருமையும் உண்டு. பள்ளி பார்வை குறிப்பேட்டில் காமாராஜர் கையெழுத்திட்டுள்ளார். 2010 ல் தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது பெற்றுள்ளது. மாநில நல்லாசிரியர் விருது (டாக்டர் ராதாகிருஷ்ணன்) பெற்ற தாமோதர கண்ணன் கடந்த 20 ஆண்டாக பள்ளி தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

இப்பள்ளியில் படித்த மாணவர்கள் மாநில, மாவட்ட அளவில் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளனர். தேசிய திறனாய்வு போட்டிகளில் கலந்து கொண்டு தேர்வு பெற்றுள்ளனர். கிராமத்து பள்ளியாகவும், போதுமான வசதிகள் இல்லாத போதும் பள்ளி நல்ல மாணவர்களை உருவாக்கியுள்ளது

Related posts

Leave a Comment