5 லட்சம் பேர்.. அடுத்தடுத்து இ-பாஸ் கோரி விண்ணப்பம்.. வேகமாக சென்னைக்கு திரும்பும் மக்கள்.. டிவிஸ்ட்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 5849 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 186492 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் 89561 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 1184 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சென்னையை விட மற்ற மாவட்டங்களில் தமிழகத்தில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

நிலைமை மோசமாகிறது சென்னையில்தான் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தது. ஆனால் போக போக சென்னையில் பாதிப்பு குறைய தொடங்கியது. அதிலும் தற்போது தினசரி கேஸ்கள் 1200க்கும் குறைவாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை பெரிய அளவில் சென்னை கட்டுப்படுத்தி உள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

சென்னை லாக்டவுன் கடந்த மாதம் சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக லாக்டவுன் போடப்பட்டது. மிக தீவிரமான லாக்டவுன் போடப்பட்டது. இதற்காக சென்னையில் இருந்து லட்சக்கணக்கில் மக்கள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். சென்னையில் பாதிப்பு அதிகமானதால், தீவிர லாக்டவுன் கொண்டு வரப்பட்டதாலும், மக்கள் கூட்டம் கூட்டமாக சென்னையை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு தஞ்சம் புகுந்தனர்.

ஆனால் என்ன இந்த நிலையில் தற்போது சென்னையில் கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. மாறாக மற்ற மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னைக்கு மீண்டும் மக்கள் திரும்ப முடிவு செய்துள்ளனர். சென்னைக்கு மீண்டும் வந்து தங்கள் பணிகளை தொடங்க இவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். சென்னையில் நிலைமை நன்றாக இருப்பதால் மீண்டும் சென்னைக்கு திரும்ப இவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இ – பாஸ் விண்ணப்பம் இதற்காக இ பாஸ் கோரி மக்கள் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர். சென்னைக்கு மீண்டும் வர வேண்டும் என்று ஏறத்தாழ 5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மொத்தமாக 492149 பேர் அடுத்தடுத்து இ பாஸ் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் பலர் பணியில் சேர வேண்டும் என்ற காரணத்தை கூறி உள்ளனர். இன்னும் சிலர் எந்த விதமான குறிப்பிடத்தகுந்த காரணத்தையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிராகரிப்பு ஆனால் இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. சென்னையில் கொரோனா மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் மிகவும் கண்டிப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக இ பாஸ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதில் கறாரான நடவடிக்கையை கடைபிடிக்கிறார்கள். அதன்படி மொத்தம் 1,61,764 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

காரணம் இல்லை 330385 பேரின் விண்ணப்பங்களை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்களின் இ பாஸ் விண்ணப்பம் மறுக்கப்பட்டுவிட்டது. சென்னைக்கு இப்படி லட்சக்கணக்கில் மக்கள் வர விண்ணப்பித்து இருப்பதால் சென்னையில் மீண்டும் பொருளாதார ரீதியான மாற்றம் ஏற்படும். பணிகள் தொடங்கும். இயல்புநிலை திரும்பும் என்கிறார்கள். சென்னை மீண்டும் வந்தாரை எல்லாம் வாழ வைக்க தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது.

Related posts

Leave a Comment