BREAKING NEWS

BREAKING | கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு – முதல்வர் அறிவிப்பு

🔲கொரோனா ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், முதல்வர் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

🔲அதில், தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால்
அமைக்கப்பட்டது.

🔲கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த
இயலாத நிலை உள்ளதாக அக்குழு தன்னுடைய பரிந்துரையை தெரிவித்துள்ளது.

🔲மாணாக்கர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக் குழு (UGC)
மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கி,

🔲முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்,

🔲இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்

🔲முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும்
மாணாக்கர்களுக்கும்,

🔲அதேபோன்று, எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும்
மாணாக்கர்களுக்கும்

🔲இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


Related posts

Leave a Comment