சேலையில் மணமக்கள் படம்: அசத்தும் பட்டதாரி பெண்

சிவகாசி:சேலை … பெண்களின் பிரதான ஆடை. சிந்து சமவெளி நாகரீகத்திலேயே சேலை இருந்ததற்கான ஆதராங்கள் உள்ளன. சிலப்பதிகாரத்திலும் சேலை அங்கம் வகித்துள்ளது.

நமது தமிழகத்தில் பாரம்பரித்தையும் பண்பாட்டையும் எடுத்து கூறும் பெண்களின் ஒரே உடை சேலை மட்டும்தான். பெண்களின் ரசனைக்கு ஏற்ப உடுத்தும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் சேலை என்பது மாறமலேயே உள்ளது. பெண் என்றாலே அழகுதான். அவர்கள் சேலை அணிந்தால் மேலும் அழகுதான்.

பெண்களின் உடைகளில் எத்தனை நவநாகரீக உடைகள் வந்தாலும் சேலைக்கு உள்ள மவுசு தனிதான். பட்டு, கைத்தறி, சிபான், பனாரஸ், போச்சம் பள்ளி, காட்டன் என சேலைகளில் எத்தனையோ வகைகள் உண்டு. பெண்கள் எப்படிப்பட்ட நாகரீகத்தில் இருந்தாலும் திருமணம் என்றால் அணிவது சேலை மட்டுமே. அந்த சேலைகளில் மணப்பெண் ,மணமகன் படங்களை நெய்து வழங்குகிறார் சிவகாசி பாரைப்பட்டயில் நம்ம சேலை கடையை நடத்தி வரும் பட்டதாரி பெண்மணி மல்லிகா.

பி.எஸ்சி.,பி.எட்.,முடித்த இவர் புகைப்படங்களை திருமணப் பட்டு சேலைகளில் கைத்தறி நெசவு மூலம் தத்ரூபமாக பதித்து தருகிறார். இது தவிர இன்றைய காலத்தில் ஆன்லைன் வர்த்தகம் தலைதுாக்கி இருக்க பட்டு சேலைகளை வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே கொண்டு போய் நேரடியாக விற்பனை செய்கிறார்.

மல்லிகா கூறியதாவது: எண்ணிலடங்கா பெண்களின் கனவு பட்டுச்சேலைதான். இதிலும் வாழ்நாளில் என்றும் மறவாதது திருமண கோலமே. அந்நாளில் உடுக்கும் சேலையில் மணமகள், மணமகன் படங்களை நெய்து வாங்கி தருகிறோம். திருமணக்கோலத்தில் நாம் உடுத்தும் பட்டுச்சேலையில் நமது முகம் பதித்து தருவது மிக சிறப்பான ஒன்று.

ஒரிஜினல் பட்டு ரகங்களை காஞ்சிபுரத்திலிருந்தும், கைத்தறி நெசவாளர்களிடம் இருந்து நேரடி கொள்முதல் மூலமாக குறைந்த விலையில் விற்பனை செய்கிறேன், என்றார்.

தொடர்புக்கு 90033 46738.

Related posts

Leave a Comment