* விருதுநகர் மருத்துவ கல்லூரி கட்டுமானம்* 2021 அக்., ஒப்படைக்க இலக்கு நிர்ணயிப்பு

விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 22.44 ஏக்கர் பரப்பளவில் ரூ. 120 கோடி மதிப்பில் அமையவுள்ள அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் ரூ.57 கோடி மதிப்பில் அமையவுள்ள தலைமை அலுவலகம் ஆகியவற்றின் கட்டுமானப்பணி உள்ளூர் தொழிலாளர்கள் மூலம் பொதுப்பணித்துறை துரிதமாக மேற்கொள்கிறது.

2021 அக்டோருக்குள் ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மருத்துவ கல்லுாரி கட்டுமானப்பணியை வட மாநில தொழிலாளர்கள் மூலம் பொதுப்பணித்துறை மேற்கொண்டது. கொரோனா தொற்று பரவலால் தொழிலாளர்கள் அனைவரும் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர். எனவே கட்டுமானப்பணியில் தொய்வு ஏற்பட்டது.

எனினும் நிர்ணயித்த காலத்துக்குள் பணியை முடிக்க முயற்சி எடுக்கப்பட்டது. இதையடுத்து உள்ளூர் கட்டுமான தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் அழைத்து வரப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.மாணவ, மாணவியர் விடுதி தலா ஐந்து மாடி கட்டடம், ஏ டைப் குடியிருப்ப் 6 மாடி, சி மற்றும் டி டைப் குடியிருப்பு 6 மாடி, டீன் குடியிருப்பு தரைத்தளத்துடன் முதல் மாடி, வகுப்பறைகள் 6 மாடி, தரைத்தளத்துடன் கலையரங்கம் முதல் மாடி, நிர்வாக அலுவலகம் தரைத்தளத்துடன் இரண்டு மாடி, கேன்டீன், வங்கி, தபால் அலுவலகம் தரைத்தளத்துடன் முதல் மாடி, விளையாட்டு பூங்கா உள்ளிட்ட சகல வசதிகளுடன் கட்டுமானப்பணியை 2021 அக்டோபரில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தரமான கட்டுமானம்

விருதுநகர் மருத்துவ கல்லுாரி கட்டுமானப்பணி நிறைவு பெற்றால் அடுத்தாண்டு முதல் மருத்துவ பட்டப்படிப்பு படிக்க புதிதாக 150 மாணவ, மாணவியருக்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே கட்டுமானப்பணியை துரிதமாகவும், தரமானதாகவும் அமைக்க பொதுப்பணித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– வழக்கறிஞர். தமிழ்செல்வன், விருதுநகர்.

Related posts

Leave a Comment