கொரோனாவுக்கு மருந்து ரெடி! ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியா விண்ணப்பம்!

உலக நாடுகளை அச்சுருத்திவரும் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துள்ளன. ஆனால், அவை அணைத்தும் சோதனை முயற்சியிலேயே உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனாவிற்கான தடுப்பூசி சோதனையானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், உலக தர வரிசையில் முதல் இடத்தை பிடித்த கல்வி நிறுவனமாகும். உலகின் மிகப் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான இப்பல்கலைக் கழகத்தில் படிக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். அவ்வாறு ஆண்டுதோறும் இந்தியா உள்ளிட்டு பல்வேறு நாடுகளிலிருந்தும் மாணவர்கள் மேற்படிப்பிற்காக இங்கு சேருவர்.

கொரோனா நோய்த் தொற்று இதனிடையே, கொரோனா எனும் நோய்த் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து பல நாடுகளும் இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் வகையில் ஆராய்ச்சிகளைத் தொடங்கின

ஆக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பூசி இந்நிலையில்தான், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியதாகவும், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை வெற்றி பெற்றதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மனிதர்களிடையே பரிசோதனை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கொரோனா தடுப்பூசி மருந்தானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்ததாகும். மேலும், மனிதர்களிடையே இம்மருந்தினை பரிசோதித்ததில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை இந்த பல்கலைக் கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியானது 1077 நபர்களுக்குச் செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதுடன் டி-செல்களையும் உருவாக்கியுள்ளது என்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மூன்றாம்கட்ட பரிசோதனையில் மேலும் அதிகமானோருக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா போன்றே தடுப்பு மரபணு ஆக்ஸ்போர்டு பல்கலையில் இந்த தடுப்பூசியானது சிம்பன்சி குரங்குகளுக்கு சளியை உருவாக்கும் வைரசை மரபணு மாற்றம் செய்து உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா வைரசின் மரபணுத் தொடரில் உள்ள முள் போன்ற புரதத்துக்கான குறியீடுகளைப் பிரித்தெடுத்து அதனை இந்த தடுப்பு மருந்தின் மரபணுவுக்குள் ஆராய்ச்சியாளர்கள் செலுத்தியுள்ளனர். இதனால், தடுப்பூசியில் உள்ள மரபணு கொரோனா வைரசின் தொற்றத்தைக்கொண்டுள்ளது.

இந்தியாவின் புதிய திட்டம் இதனிடையே, அஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியினை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் கேட்டு விண்ணப்பிக்க உள்ளது.

உலகிலேயே அதிக மருந்துகளை உற்பத்தி செய்யும் சீரம் இன்ஸ்டிடியூட் உலகிலேயே அதிகளவில் மருந்துகளை உற்பத்தி செய்யும் ஓர் நிறுவனம் ஆகும். ஏற்கெனவே, ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றதும் சீரம் நிறுவனத்துடன் இணைந்து அதிகளவில் மருந்துகளை உற்பத்தி செய்வோம் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ரூ.1000-க்கு விற்பனை இந்த கொரோனா தடுப்பூசி மருந்தானது இந்தியாவில் தயாரித்து, 100 கோடி டோஸ் வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது. அதோடு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசி வரும் நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் எனவும், இந்த தடுப்பூசியானது ரூ.1,000 விலையில் வினியோகிக்கப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment