மழையால் செம்மறி ஆடுகள் ‘குஷி’

அருப்புக்கோட்டை,:அருப்புக்கோட்டை புறநகர் பகுதிகளில் செம்மறி ஆடுகளை பலர் வளர்த்து வருகின்றனர். ஒருவர் அல்லது 4 பேர் சேர்ந்து 50 முதல் 100 ஆடுகளை ‘கிடைய்’ அமைத்து வளர்த்து வருகின்றனர். ஆடுகளை மேய்பவர்களுக்கு தனியாக ஊதியம் கொடுக்கின்றனர்.

தோட்டங்கள், தரிசு நிலங்களில் தற்காலிக வேலி அமைத்து ஆடுகளை வளர்க்கின்றனர். விவசாய நிலத்தில் கிடாய் அமைப்பதால் ஆடுகள் வெளியேற்றும் சிறுநீர், கழிவுகள் விளை நிலத்திற்கு இயற்கையான உரமாக பயன்படுகிறது. இப்பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மழை பெய்ததால் ஆங்காங்கு புற்கள் முளைத்துள்ளன. இந்த இளம் புற்களை ஆடுகள் விரும்பி உண்ணும். மழையால் ஆடுகளுக்கு தீவன பஞ்சம் தற்காலிகமாக நீங்கியுள்ளது.

Related posts

Leave a Comment