அவருக்கு பவுலிங் போடுறது ரொம்ப கஷ்டம்.. ஒவ்வொரு பந்துக்கும் 4 ஷாட் வைச்சிருப்பார் – அனில் கும்ப்ளே

மும்பை : கிரிக்கெட் உலகின் சுழற் பந்து ஜாம்பவான்களில் முக்கியமானவர் அனில் கும்ப்ளே.

முத்தையா முரளிதரன், ஷேன் வார்னேவுக்கு பின் அதிக டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய சுழற் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே. அவர் தான் பந்து வீசியதில் கடினமான பேட்ஸ்மேன் யார் என்பதை பற்றி கூறினார்.

18 ஆண்டுகள் சுமார் 18 ஆண்டுகள் கிரிக்கெட் களத்தை கலக்கினார் அனில் கும்ப்ளே. அவர் பந்து வீசிய காலத்தில் பல தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் ஆடி வந்தனர். ரிக்கி பாண்டிங், ஜாக்கஸ் காலிஸ், குமார் சங்ககாரா, இன்சமாம் உல் ஹக், சயீத் அன்வர், பிரையன் லாரா என பலருக்கு எதிராக பந்து வீசி உள்ளார்.

சிறந்த கேப்டன் பல சமயங்களில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு திருப்பம் அளித்து இருக்கிறார் அனில் கும்ப்ளே. அவரது அனுபவத்தின் காரணமாக 2007-08 காலகட்டத்தில் இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அந்த சமயத்தில் பல முக்கிய வெற்றிகளை பதிவு செய்து இருந்தது இந்திய அணி.

கடினமான பேட்ஸ்மேன் யார்? அனில் கும்ப்ளே தான் பந்து வீசியதில் மிகவும் கடினமான பேட்ஸ்மேன் யார் என்பது பற்றி கூறி உள்ளார். அந்த குறிப்பிட்ட பேட்ஸ்மேன் ஒவ்வொரு பந்துக்கும் நான்கு வகையான ஷாட் வைத்திருப்பார் என்றும் கூறி தன் வியப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

உச்சகட்டம் அனில் கும்ப்ளே கூறுகையில், “பல பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவது கடினமாக இருந்துள்ளது. அதில் உச்சகட்டம் பிரையன் லாரா தான்” என்றார். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆன பிரையன் லாராவிற்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசி உள்ளார் அனில் கும்ப்ளே.

நான்கு வகையான ஷாட் “லாரா நீங்கள் பந்துவீசும் ஒவ்வொரு பந்துக்கும் நான்கு வகையான ஷாட் வைத்திருப்பார். அது தான் மிகப் பெரிய சவால். அவரை வீழ்த்த முடியும், அவுட் ஆக்க முடியும் என நினைப்போம். ஆனால், அவர் தன் ஷாட்டை மாற்றி தேர்ட் மேன் திசையில் பந்தை தட்டி விடுவார்” என்று லாரா குறித்து பேசினார் கும்ப்ளே.

தாடையில் காயம் அனில் கும்ப்ளே பிரையன் லாராவிற்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடி அதில் ஐந்து முறை அவரை வீழ்த்தி உள்ளார். 2002 டெஸ்ட் போட்டி ஒன்றில் தன் தாடையில் காயம் ஏற்பட்ட போது கட்டு போட்டுக் கொண்டு வந்து அவரது விக்கெட்டை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்திய பேட்ஸ்மேன்கள் இந்திய பேட்ஸ்மேன்கள் பற்றியும் குறிப்பிட்டார் அனில் கும்ப்ளே. சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன், சேவாக் போன்றோர் தன் அணியை சேர்ந்தவர்கள் என்பதால் நல்ல வேளையாக அவர்களுக்கு பந்து வீசும் நிலை தனக்கு வரவில்லை என்றார்.

சிந்திக்கும் நிலை வரவில்லை அவர்களுக்கு வலைப் பயிற்சியில் மட்டுமே பந்து வீசுவேன். போட்டிக்கு முந்தைய தினம் மாலை அவர்களுக்கு எப்படி பந்து வீசுவது என சிந்திக்கும் நிலை தனக்கு வரவில்லை எனவும் குறிப்பிட்டார் அனில் கும்ப்ளே. டெஸ்ட் போட்டிகளில் கும்ப்ளே 619 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment