வாறுகால்களை தூர்வாரணும்

நகர், கிராமங்களில் மழைநீர், வீட்டுக் கழிவுநீர் வெளியேறுவதற்காக ஓடை மற்றும் தெருக்களில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.

இவைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளது. ஓடைகளில் முட்புதர்களும், கோரைப்புற்களும் நிறைந்து தண்ணீர் ஓட்டத்தை தடுக்கிறது. அதுவே சாக்கடையாக மாறிவிடுகிறது. இதனால் அதிகளவில் துர்நாற்றம், சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மழைக்காலம் துவங்கியுள்ளதால் மழை நீர் சாலைகள், குழிகளில் தேங்கி நிற்கிறது.

இவை கொசுக்கள் உற்பத்தியாக வழி வகுக்கிறது. கொரோனா தொற்று ஒரு புறம் வேகமாக பரவி விரும் நிலையில் கொசுக்களால் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுக்கும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட வேண்டும்.

Related posts

Leave a Comment