Pudupatti Rock Cut Cave

புதுப்பட்டி குடைவரைக் கோவில்: சிவகாசி தாலுக்கா, மங்கல புதுப்பட்டியில் இருக்கும் பழமையான பாண்டியர் கால குடைவரைக் கோவில்…. கவனிப்பாரற்று கிடக்கும் இந்த குடவரைக் கோவிலை சீரமைத்து பராமரிக்க கோரி, தொல்லியல் துறைக்கு நாம் தமிழர் கட்சி- சிவகாசி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது….Pudupatti Rock Cut Cave – Sivakasi Taluk-Virudhunagar District.புதுப்பட்டிக் குடைவரை – விருதுநகர் மாவட்டம்.==>அழகாபுரிக்கும் மூவரைவென்றானுக்கும் இடையில் கிழக்கில் பிரியும் சிறிய சாலை ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள எரிச்சநத்தத்திற்கு அழைத்துச்செல்கிறது. அங்கிருந்து சிவகாசிச் சாலையில் 9 கிலோமீட்டர் பயணித்தால் மங்கலம் புதுப்பட்டியை அடையலாம். ஊரின் புறத்தே அருச்சுனா நதியின் மேற்குக் கரையில் உள்ள சுண்ணாம்புப் பாறையின் கிழக்குச் சரிவில் காணப்படும் குடைவரையின் முன் இரண்டு மண்டபங்கள் பாறைச்சரிவையே கூரையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.==> கருங்கல்லாலான நிலையமைப்புடன் கிழக்கில் வாயில் பெற்றுச் செங்கற் கட்டுமானமாய் விளங்கும் முன்மண்டபத் தின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள திறப்புகள் குடைவரையைச் சுற்றி அமைந்துள்ள திருச்சுற்றுக்கான வழிகளாக அமைய, மண்டபத்தின் மேற்கு வாயில் முகமண்டபத்திற்கு வழி விடுகிறது. இவ்வாயிலின் இருபுறத்தும் வெறுமையான கோட்டங்கள் உள்ளன==> தமிழ்நாட்டுக் குடைவரைகளில் திருச்சுற்று முயற்சியை மாமண்டூர் மூன்றாம் குடைவரையிலும் மாமல்லபுரம் பஞ்ச பாண்டவர் குடைவரையிலும் காணமுடிந்தாலும், அவை முற்றுப்பெறவில்லை. தென்மாவட்டக் குடைவரைகளில் புதுப்பட்டிக் குடைவரை தவிர வேறெந்தக் குடைவரையிலும் திருச்சுற்று முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. முற்றிலும் சுண்ணாம்புப் பாறையிலேயே குடையப்பட்டுள்ள புதுப்பட்டிக் குடைவரையின் திருச்சுற்று இதனால் தனிச் சிறப்புப் பெறுகிறது.==> The cave is most dilapidated and has unique special feature’s apart from other rock-cut cave.==> The lime rocky slopes found at the eastern entrance forms the roof for the front and mukha mandabam.==> The entire cave is made of basaltic stone (granite) with east entrance.==> The front mandaba has southern and northern entrance makes a circumambulatory pathway for the cave.==> The mugamandapam can be reached from southern entrance of the cave . The koshtam is empty near by the entrance.==> Circumambulatory passage also seen in other caves like maamandur third cave, mahabalipuram panchapandavar cave, but it is unfinished.Pudupatti cave is the only cave in south Tamil Nadu which have finished Circumambulatory passage and also the entire cave is made of lime rock.Reference : r.k.lakshmi

Related posts

Leave a Comment