முதன்முறையாக நடிகர் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார் அனுஷ்கா ஷெட்டி.. பரபரக்கும் திடீர் தகவல்!

சென்னை: பிரபல நடிகை அனுஷ்காவுடன் முதன் முறையாக விஜய் சேதுபதி ஜோடி சேர இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் அனுஷ்கா. அவர் இப்போது நடித்துள்ள படம், சைலன்ஸ் (நிசப்தம்).

கொரோனா காரணமாக லாக்டவுன் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்வதா, தியேட்டர் ரிலீஸுக்கு காத்திருப்பதா என்று தயாரிப்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்தப் படத்துக்குப் பிறகு, எந்த படங்களையும் ஒப்புக்கொள்ளவில்லை நடிகை அனுஷ்கா. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதாகக் கூறியிருந்தார். கொரோனா காரணமாக இந்தப் படம் எப்போதும் தொடங்கும் என்று தெரியவில்லை.

நடிப்பை விட்டு விலக கவுதம் வாசுதேவ் மேனன் ஏற்கனவே பொருளாதாரச் சிக்கலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் படம் தொடங்குமா என்பதும் டவுட். அடுத்து வந்த சில வாய்ப்புகளையும் அவர் நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருக்கும் நடிகை அனுஷ்கா, நடிப்பை விட்டு விலகப் போவதாக டோலிவுட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகி இருந்தன.

முதன் முறையாக இந்நிலையில் நடிகை அனுஷ்காவும், விஜய் சேதுபதியும் முதன்முறையாக இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை தலைவி படத்துக்குப் பிறகு விஜய் இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அனுஷ்கா இருவருக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

துக்ளக் தர்பார் விஜய் சேதுபதி, இப்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படமும் அடுத்து நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படமும் விரைவில் வெளியாக இருக்கின்றன. இதையடுத்து ஜனநாதன் இயக்கும் லாபம், வெங்கடகிருஷ்ண ரோகாந்த் இயக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

Related posts

Leave a Comment