கண் திருஷ்டி மை தயாரிக்கும் விருதுநகர்

விருதுநகர்:குழந்தைகளை குளிக்க வைத்து கருப்பு மையை நெற்றி, கன்னங்கள், கால்களின் பாதங்களில் வட்டவடிவமாக பொட்டு வைக்கின்றனர். கண் இமைகளின் ஓரங்களில் மையிடுவதால் குழந்தை பார்ப்பதற்கு அழகாகவும், மிடுக்காகவும் தோன்றும். இதோடு இது கண் திருஷ்டியை போக்கும் என்பது தாய்மார்களின் நம்பிக்கை.

இதை விருதுநகர் குல்லுார்சந்தையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 பேர் கூட்டாக குடிசை தொழிலாக செய்து வருகின்றனர். நாட்டுக்கருவேல காய்கள், ஜவ்வரிசி, பச்சரிசி, ஜவ்வாது ஆகியவற்றை இளஞ்சூட்டில் பக்குவமாக வறுத்து இக்கலவையை பவுடராக்கி கருப்பு மை தயாரிக்கின்றனர்.

இதை பாதுகாக்கும் வகையில் தேங்காய் சிரட்டையை மிஷினில் செதுக்கி வெளிபுறத்தை பாளீஷ் செய்து வட்ட வடிவமாக்க அதில் இம்மையை விடுகின்றனர். கண் திருஷ்டி மை அடங்கிய தேங்காய் சிரட்டை சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பெருமளவு ஏற்றுமதியாகிறது. இந்த மை விருதுநகரில் மட்டுமே தயாராகிறது என்பது குறிப்பிடதக்கது.

Related posts

Leave a Comment