ராஜபாளையம்:மாவட்டத்தில் நிழலுக்காக நடப்பட்டு பராமரிக்கப்படும் மரங்களில் விளம்பர போர்டுகளை மாட்ட ஆணி கொண்டு அடிப்பதால் பட்டுபோகும் நிலையில் இதை தடுத்து நிறுத்த வேண்டிய துறை அதிகாரிகள் மவுனம் காட்டுகின்றனர்.
அனைத்து வகை ரோடுகளின் ஓரங்களில் நிழலுக்காக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப் படுகின்றன. இவை வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, ஓளி போன்றற மாசுக்களை குறைக்கவும், நிழலுக்காகவும் உபயோகமாகின்றன. இவற்றில் விளம்பரம் செய்யும் அமைப்புகள் தங்களின் விளம்பர போர்டுகளை ஆணி அடித்து மாட்டுகின்றனர்
நாளடைவில் மரங்கள் பட்டு போகும் நிலைக்கு ஆளாகின்றன. பல பகுதிகளில் ரோடு விரிவாக்கப்பணிகளுக்காக மரங்கள் அகற்றப்பட்டு அதற்கு பதில் இதுவரை மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுத்த பாடில்லை. பெரும்பாலும் சந்திப்பு, மக்கள் கூடும் இடங்கள், பஸ் ஸ்டாண்டு, பள்ளிகள், பஸ் ஸ்டாப், மருத்துவமனைகள் அருகில் உள்ள ரோட்டோர மரங்களையே குறிவைத்து செய்கின்றனர். இதனால் மரங்கள் பாழாக நிழலுக்கு வழியில்லா சூழல் ஏற்படுகிறது. குடியிருப்பு பகுதியிலும் இதுபோன்ற நிலைகள் தொடர்கின்றன.
முன் வரலாமே துறைகள்
மரத்தில் ஆணியை அடிப்பதால் ஓட்டை விழுந்து கிருமி தொற்று ஏற்படுவதுடன் அனைத்து கிளைகளுக்கும் செல்லும் நீர் சத்து தடுக்கப்படுகின்றன. இதனால் சத்தை இழுந்து கொஞ்சம் கொஞ்சமாக பட்டு போவதோடு பலமான காற்று வீசும் போது முறிந்து விழுகின்றன. நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி, நெடுஞ்சாலை ,வனத்துறையினரை மாவட்ட நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும்.
அர்ஜூனன்,
சமூக ஆர்வலர், ராஜபாளையம்.