விவசாய நிலம் போல் ரோடு

வசதியின்றி திறந்தவெளிஒரு பொதுக்கழிப்பறை மட்டுமே உள்ளது. இதுவும் மோட்டார் பழுதால் பயன் படுத்த முடியாது உள்ளது. வேறு வழியின்றி வைப்பாற்றங்கரை , காலி பிளாட்டுகளை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் தொற்றுநோய் அபாயம் உள்ளது.

செந்தில், நிப்பு தொழிலாளி

குடிநீர் குழாயில் உடைப்பு

அடிக்கடி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதை சரி செய்ய நகராட்சியில் புகார் செய்தாலும் உடனடியாக சரி செய்யாமல் காலம் தாழ்த்துகின்றனர். இதன் மூலம் ரோடு சகதியாக மாறி விட்டது. முதியவர்கள் அடிக்கடி வழுக்கி விழுகின்றனர்.

ஷாஜகான்,

தீப்பெட்டி தொழிலாளி

கண்டுகொள்வதில்லை

தெருக்களில் சாக்கடை மீது கட்டப்பட்ட பாலம் உடைந்து கம்பிகள் நீட்டிக்கொண்டுள்ளது. இதை கட்டித்தர வலியுறுத்தியும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்களே மக்களிடம் வீட்டிற்கு ரூ .500 ,300 என வசூலித்து பாலத்தை சரி செய்தோம். உப்புத்தண்ணீர் மோட்டார் பழுது , தெருவிளக்கு பழுதானாலும் நாங்களே சரி செய்கிறோம். அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

மாரிகண்ணு,

உரிமையாளர், நிப்பு ஆலை

Related posts

Leave a Comment