அருப்புக்கோட்டை காவலர் குடும்பத்திற்கு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் #கே_டி_ராஜேந்திரபாலாஜி தனது சொந்த நிதி ரூ.3லட்சம் வழங்கினார்

கொரோனாவால் உயிரிழந்த அருப்புக்கோட்டை காவலர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளர் பால்வளத் துறை அமைச்சர் மாண்புமிகு #கே_டி_ராஜேந்திரபாலாஜி அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். கொரோனாவால் உயிரிழந்த அருப்புக்கோட்டை காவலர் குடும்பத்திற்கு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் #கே_டி_ராஜேந்திரபாலாஜி தனது சொந்த நிதி ரூ.3லட்சம் வழங்கினார் . சிவகாசி அருகே சித்துராஜபுரம் ராமசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் #ஜெயபிரகாஷ். அருப்புக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்தார். பணியில் இருந்த தலைமை காவலர் #ஜெயபிரகாசிற்கு கொரோணா தொற்று உறுதியானது. சுமார் ஆறு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த #ஜெயப்பிரகாஷின் குடும்பத்தினரை சிவகாசி அருகே சித்துராஜபுரம் ராமசாமி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளர்…

Read More

ஜூலை 26 கொரோனா

ஜூலை 26 – இன்று நம் மாவட்டத்தில் மொத்தம் 426 (காலை 202 + மாலை 224) கொரோனா தொற்றுகள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் சிவகாசி பகுதியில் இருந்து மொத்தம் 102 (காலை 96 + மாலை 6) புதிய தொற்றுகள். காலை கண்டறியப்பட்ட 96 தொற்றுகள் ஏற்கனவே இன்னொரு பதிவில் உள்ளது. மாலையில் தொற்று கண்டறியப்பட்ட 6 புதிய பகுதிகளின் விவரம் : பூவநாதபுரம் – 1 அருணாச்சலபுரம் – 1 பூவாணி – 1 நடுவப்பட்டி – 1 கிருஷ்ணபேரி – 1 குப்பண்ணாபுரம் – 1 ஊர்வாரியாக இன்று : ராஜபாளையம் – 220 சிவகாசி – 102 ஸ்ரீவில்லிபுத்தூர் – 87 சாத்தூர் – 17

Read More

Unlock 3: பள்ளிகள், கல்லூரிகள், ஜிம், தியேட்டர்கள் நிலை என்ன

Unlock 3: பள்ளிகள், கல்லூரிகள், ஜிம், தியேட்டர்கள் நிலை என்ன 🔲நாட்டில் இரண்டாம் கட்ட அன்லாக் முடிவடைந்து, மூன்றாம் கட்ட அன்லாக் தொடர்பான வழிகாட்டுதல்களை அரசு தயாரித்து வரும் நிலையில், ஜிம்கள், தியேட்டர்கள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 🔲வணிக நடவடிக்கைகளை தொடக்க வேண்டும் என ஜிம் உரிமையாளர்களிடமிருந்து தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் கட்ட அன்லாக்கில் ஜிம்களை மீண்டும் திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதிக்கலாம் என கூறப்படுகிறது. 🔲மத்திய அரசின் 2ம் கட்ட அன்லாக் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைய இருப்பதால், உள்துறை அமைச்சகம் 3ம் கட்ட அன்லாக்கிற்கான வழிகாட்டுதல்களைத் தயாரித்து வருவதாக ஊடக அறிக்கைகள் கூறியது. உள்துறை அமைச்சகம் ஆகஸ்ட் 1 க்கு முன்பாக வழிகாட்டுதல்களை வெளியிடும் என கூறப்படுகிறது. 🔲அன்லாக்கின் அடுத்த கட்டத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும். நாட்டில் மெட்ரோ…

Read More

எனக்கு நடந்தது தான் சேவாக், ஹர்பஜன், ஜாகிர், கம்பீருக்கும் நடந்தது.. பிசிசிஐயை விளாசிய யுவராஜ் சிங்!

மேட்ச் வின்னர் என்ற பதத்தை முதன்முதலில் இந்திய அணியில் ஒரு வீரரை அடையாளம் காட்ட பயன்படுத்தத் துவங்கியதும் யுவராஜ் சிங்கிடம் இருந்துதான். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட்டில் அணிக்காக நீண்ட காலம் ஆடிய வீரர்களுக்கு உரிய கௌரவம் கிடைக்கவில்லை எனக் கூறி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். யுவராஜ் சிங் 2000மாவது ஆண்டில் இந்திய அணியில் காலடி எடுத்து வைத்து துவக்கத்தில் இருந்தே அதிரடி வீரர் என பிரபலம் அடைந்தார். மிடில் ஆர்டரில் இந்திய அணியில் பேட்டிங் பலத்தை பன்மடங்காக பெருக்கியவர். பல போட்டிகளில் அணியை வெல்ல வைத்தவர். தன் விக்கெட் போனாலும் பரவாயில்லை என சுயநலமின்றி அணிக்காக அடித்து ஆடக் கூடியவர் யுவராஜ் சிங். 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியவர்.…

Read More

ரேசன்கடைகளில் நாளை முதல் இலவச மாஸ்க் கொடுக்கறாங்க ஒரு ஆளுக்கு 2 வாங்கிக்கங்க

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முதல் ரேசன்கடைகளில் இலவச மாஸ்க் விநியோகம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இலவச மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்கி வைக்கிறார். கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு யாராவது உடல் நிலை சரியில்லாதவர்கள்தான் மாஸ்க் போட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டிருப்பார்கள். ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் முககவசம் இல்லாமல் யாருமே வெளியே வர முடியாது. கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அவசியம் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மாஸ்க் போடாமல் வெளியே சுற்றித்திரிந்தால் ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கின்றனர். கிராமங்களில் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அனைவராலும் விலை கொடுத்து மாஸ்க் வாங்க முடியாது என்பதால் ரேசன் கடைகள் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினருக்கு 2 முக கவசங்கள் என்ற வீதத்தில் வழங்கப்படும் என்று…

Read More

இன்று கார்கில் போர் வெற்றி தினம்: தீரத்தோடு போரிட்டு உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு சல்யூட்

காஷ்மீர்: 21ஆம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உயிரை துச்சமென மதித்து பாகிஸ்தான் ராணுவ வீரர்களை எதிர்த்து வீரத்தோடு போரிட்டு வெற்றியை நாட்டு பரிசளித்தனர் நம் நாட்டு ராணுவ வீரர்கள். அந்த வீரர்களை நினைவு கூறும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் காஷ்மீரில் உள்ள டிராஸ் வார் மெமோரியல் கார்கில் போர் நினைவிடத்தில் விழா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எளிமையாக விழா நடைபெற்றது. இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போர்களிலேயே 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போர்தான் இன்று வரை மிகவும் தீவிரமான போர். இந்திய படைக்கும், பாகிஸ்தான் படைக்கும் இடையில் நிகழ்ந்த போரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை துவம்சம் செய்து இந்தியா வென்றது. 1999 மே 3ம் தேதி தொடங்கிய…

Read More

நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி நன்றி

சென்னை:மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தேவையான உதவியை செய்வதற்கு உத்தரவாதம் அளித்த, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தி.மு.க., மகளிர் அணி செயலர், கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார். மகளிர் சுய உதவி குழுக்கள், வங்கிகளிலும், சிறிய நிதி நிறுவனங்களிலும், வாங்கிய கடனுக்கான தவணைகளை செலுத்துமாறு, கட்டாயப் படுத்தப்படுகின்றனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மகளிர் சுயஉதவி குழு பெண்களை, வங்கிகள், நிதி நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதைத் தவிர்க்க, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வட்டி பணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்.கடன் தவணையை அடைப்பதற்கு அவகாசம் வழங்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமீபத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தி.மு.க., மகளிர் அணி செயலர், கனிமொழி கோரிக்கை கடிதம் எழுதினார். ‘கனிமொழியின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்’ என, நிர்மலா சீதாராமன் கடிதம் வாயிலாக, கனிமொழிக்கு பதில் அளித்துள்ளார்.…

Read More