அருப்புக்கோட்டை காவலர் குடும்பத்திற்கு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் #கே_டி_ராஜேந்திரபாலாஜி தனது சொந்த நிதி ரூ.3லட்சம் வழங்கினார்

கொரோனாவால் உயிரிழந்த அருப்புக்கோட்டை காவலர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளர் பால்வளத் துறை அமைச்சர் மாண்புமிகு #கே_டி_ராஜேந்திரபாலாஜி அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். கொரோனாவால் உயிரிழந்த அருப்புக்கோட்டை காவலர் குடும்பத்திற்கு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் #கே_டி_ராஜேந்திரபாலாஜி தனது சொந்த நிதி ரூ.3லட்சம் வழங்கினார் . சிவகாசி அருகே சித்துராஜபுரம் ராமசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் #ஜெயபிரகாஷ். அருப்புக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்தார். பணியில் இருந்த தலைமை காவலர் #ஜெயபிரகாசிற்கு கொரோணா தொற்று உறுதியானது. சுமார் ஆறு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த #ஜெயப்பிரகாஷின் குடும்பத்தினரை சிவகாசி அருகே சித்துராஜபுரம் ராமசாமி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளர் மாண்பு பால்வளத் துறை அமைச்சர் #கே_டி_ராஜேந்திரபாலாஜி அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார். தொடர்ந்து தனது சொந்த நிதி ரூ 3 லட்சத்தை ஜெயப்பிரகாசம் குடும்பத்திற்கு வழங்கினார். ஏற்கனவே கடந்த வாரம் சேத்தூர் காவல்நிலையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் அமைச்சர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.மாவட்ட எஸ்பி பெருமாள் சிவகாசி டிஎஸ்பி பிரபாகரன் அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேசன் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஜா க்ரைம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Related posts

Leave a Comment