கொரோனா பாதிப்பு.. உலக அளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.. பிரதமர் மோடி மான் கி பாத் உரை!

டெல்லி: கார்கில் போரில் இந்தியா சிறப்பான வெற்றி பெற்றது. இந்திய மக்கள் இந்த நாளை கொண்டாடுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் இந்த நாளை இந்திய மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள், என்று பிரதமர் மோடி தனது மான் கி பாத் உரையில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி எல்லா மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்கள் முன் வானொலியில் பேசுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் மோடி முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருப்பார். இதில் நிறைய தகவல்களை அவர் பகிர்ந்து கொள்வார். இந்த நிலையில் காஷ்மீரில் நடந்த கார்கில் போரில் இந்தியா வென்றதை நினைவுகூரும் விதமாக இன்று கார்கில் போர் வெற்றி நாள் கொண்டாடப்படுகிறது. 21வது கார்கில் போர் வெற்றி நினைவு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாகவும், கொரோனா பாதிப்பு தொடர்பாகவும் பிரதமர் மோடி இன்று பேசினார்.

என்ன சொன்னார் அதில், இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள்.இன்று நாம் கார்கில் விஜய் டிவாஸ் நாளை கொண்டாடுகிறோம். கார்கில் வெற்றியை இன்று நாம் கொண்டாடுகிறோம். கார்கில் போரை, அது நடந்த விதத்தை இந்தியா எப்போதும் மறக்காது.இந்திய நிலத்தை கைப்பற்றலாம் என்று பாகிஸ்தான் தவறாக நினைத்து.

சாகசம் வீண் சாகசத்தை செய்து பார்க்க பாகிஸ்தான் திட்டம் போட்டது. பாகிஸ்தான் உள்ளே நடக்கும் உள்நாட்டு பிரச்சனையை திசை திருப்ப பாக். இப்படி செய்தது. ஆனால் அந்த போரில் இந்தியா சிறப்பான வெற்றி பெற்றது. இந்திய மக்கள் இந்த நாளை கொண்டாடுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் இந்த நாளை இந்திய மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்தியா எப்படி இந்தியாவின் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்.நமக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். வீரர்களை எல்லைக்கு அனுப்பி வைத்த அம்மாக்களை தலை வணங்குகிறேன். கொரோனாவிற்கு எதிராக நாம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். குணமடையும் சதவிகிதம் இந்தியாவில் மிக அதிகம். மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிக பேர் குணமடைகிறார்கள்.

கொரோனா இறப்பு சதவிகிதம் நம்முடைய நாட்டில் மிக மிக குறைவு. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக குறையவில்லை. பல இடங்களில் இன்னும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாம் எப்போதும் போல கவனமாக இருக்க வேண்டும். கொரோனா மரணங்கள் வருத்தம் அளிக்கிறது. ஆனால் இந்தியா கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது.

பொருளாதாரம் ஒரு பக்கம் கொரோனாவை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இன்னொரு பக்கம் பொருளாதாரத்தை சரிப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இந்தியாவை நோக்கி முதலீடுகள் வருகிறது, நமக்கு புதிய வாய்ப்புகள் வர தொடங்கி உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் உருவாக்கப்படும் மூங்கில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. மக்கள் இதை வைத்து பெரிய மார்க்கெட்டை அங்கு உருவாக்கி உள்ளனர்.

உற்பத்தி பீகார் இளைஞர்கள் நவீனமான ஆக்கபூர்வ பணிகளை செய்கிறார்கள்.இந்த ரக்சாபந்தன் விழாவில் நாம் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளையே விழாக்கள் மூலம் நாம் ஊக்குவிக்க வேண்டும். விழாக்கள் மூலம் நாம் வியாபாரங்களை பெருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Related posts

Leave a Comment