நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி நன்றி

சென்னை:மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தேவையான உதவியை செய்வதற்கு உத்தரவாதம் அளித்த, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தி.மு.க., மகளிர் அணி செயலர், கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார்.

மகளிர் சுய உதவி குழுக்கள், வங்கிகளிலும், சிறிய நிதி நிறுவனங்களிலும், வாங்கிய கடனுக்கான தவணைகளை செலுத்துமாறு, கட்டாயப் படுத்தப்படுகின்றனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மகளிர் சுயஉதவி குழு பெண்களை, வங்கிகள், நிதி நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதைத் தவிர்க்க, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வட்டி பணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்.கடன் தவணையை அடைப்பதற்கு அவகாசம் வழங்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமீபத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தி.மு.க., மகளிர் அணி செயலர், கனிமொழி கோரிக்கை கடிதம் எழுதினார். ‘கனிமொழியின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்’ என, நிர்மலா சீதாராமன் கடிதம் வாயிலாக, கனிமொழிக்கு பதில் அளித்துள்ளார்.

நிர்மலா சீதாராமனின் பதில் கடிதத்தை, தன் டுவிட்டர் பக்கத்தில், நேற்று கனிமொழி வெளியிட்டு, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, உதவி புரிவதற்கு உத்தரவாதம் அளித்த, நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment