Unlock 3: பள்ளிகள், கல்லூரிகள், ஜிம், தியேட்டர்கள் நிலை என்ன

Unlock 3: பள்ளிகள், கல்லூரிகள், ஜிம், தியேட்டர்கள் நிலை என்ன

🔲நாட்டில் இரண்டாம் கட்ட அன்லாக் முடிவடைந்து, மூன்றாம் கட்ட அன்லாக் தொடர்பான வழிகாட்டுதல்களை அரசு தயாரித்து வரும் நிலையில், ஜிம்கள், தியேட்டர்கள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

🔲வணிக நடவடிக்கைகளை தொடக்க வேண்டும் என ஜிம் உரிமையாளர்களிடமிருந்து தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் கட்ட அன்லாக்கில் ஜிம்களை மீண்டும் திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதிக்கலாம் என கூறப்படுகிறது.

🔲மத்திய அரசின் 2ம் கட்ட அன்லாக் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைய இருப்பதால், உள்துறை அமைச்சகம் 3ம் கட்ட அன்லாக்கிற்கான வழிகாட்டுதல்களைத் தயாரித்து வருவதாக ஊடக அறிக்கைகள் கூறியது. உள்துறை அமைச்சகம் ஆகஸ்ட் 1 க்கு முன்பாக வழிகாட்டுதல்களை வெளியிடும் என கூறப்படுகிறது.

🔲அன்லாக்கின் அடுத்த கட்டத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும். நாட்டில் மெட்ரோ சேவைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு. சினிமா அரங்குகள், தியேட்டர்கள் மற்றும் ஜிம்கள், தை நபர் விலகல் தொடர்பான கடுமையான விதிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

🔲பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடியிருக்கும் பல்வேறு தேர்வு முடிவுகள் வந்துள்ளன. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், தற்போது மீண்டும் திறக்க வாய்ப்பு மிக குறைவு.


Related posts

Leave a Comment