ஊரடங்கு நீட்டிப்பா; கலெக்டர்களுடன் முதல்வர் ஜூலை 29ல் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஜூலை 31க்கு பின் பொது ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன்ஜூலை 29ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் மார்ச் 25 முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 31ல் ஊரடங்கு நிறைவடைகிறது.இதற்கிடையில் மக்களின் வாழ்வாதாரம் கருதி பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. ஆனால் பல மாவட்டங்களில் முன்பை விட கொரோனா நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்தபடி உள்ளது.

இந்நிலையில் ஜூலை 29ல் மாவட்ட கலெக்டர்களுடன் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அப்போது மாவட்டங்களில் நோய் அதிகரிப்பை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்கிறார்.அத்துடன் ஊரடங்கை தளர்த்தலாமா அல்லது நீட்டிக்கலாமா என கலெக்டர்களிடம் கருத்துக்களை கேட்க உள்ளார். ஜூலை 30ல் மருத்துவ நிபுணர் குழுவினரின் கருத்தையும் கேட்க உள்ளார்.

Related posts

Leave a Comment