பி.டி.ஓ., அலுவலகத்தில் 10 பேருக்கு கொரோனா

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றும் 10 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அலுவலகம் மூடபட்டது.

ஸ்ரீவில்லிபுத்துாரில் தொற்று பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து இன்று முதல் ஆக.1 வரை நகராட்சி பகுதிகளில் மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் செயல்பட தடை விதிக்கபட்டு உள்ளது.

வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் 10 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் அலுவலகம் மூன்று நாட்கள் மூடபட்டது. கிருமிநாசினி தெளிக்கபட்ட பிறகே மீண்டும் திறக்கப்படும். மங்காபுரம் காய்கறி மார்கெட்டை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு தனிமைபடுத்தபட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment