வலியுறுத்தல்: நீர்வரத்து,நீர்நிலைகள் ஓடைகள் மீட்க : வீணாகும்மழை நீரை சேமிக்க

காரியாபட்டி:மாவட்டத்தில் வீணாகும் மழை நீரை சேமிக்க பராமரிப்பில்லாமல் உள்ள நீர் நிலைகள், நீர்வரத்து ஓடைகள் மீட்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

விவசாயம், கால்நடைகள், நிலத்தடி நீர்மட்டம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்காக நீர் நிலைகளை ஏற்படுத்தி நீர்வரத்து கால்வாய்கள் மூலம் மழைநீர் வீணாகாமல் முன்னோர்கள் சேமித்தனர். இதனால் விவசாயம் செழிப்பாகவும், கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரும் கிடைத்தது. நிலத்தடி நீர்மட்டம் பெருகிறது. குடிநீர் பிரச்னை எழவில்லை.

வீடுகளின் விரிவாக்கத்தால் பல்வேறு இடங்களில் நீர் வரத்து ஓடைகள் ஆக்கிரமிக்கப் பட்டன. மழை நீரை சேமிக்க முடியாமல் போனதால் நீர்நிலைகளும் காணாமல் போயின. விவசாயம், கால்நடைகள் பாதித்ததோடு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது பெய்யும் மழை நீரை நீர் நிலைகளில் சேமிக்க முடியாமல் வீணாகி வெளியேறி வருகிறது. ஆக்கிரமிப்பால் காணாமல் போன நீர்நிலைகள், நீர்வரத்து ஓடைகளை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மழை நீர் சேமிப்பு

விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் பாதித்ததற்கு காரணம் நீர்நிலைகள், நீர்வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பால் காணாமல் போனது தான். வீணாகும் மழை நீரை சேமிக்க, காணாமல் போன நீர்வரத்து ஓடைகள், நீர்நிலைகளை மீட்டு மழை நீர் சேமிப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

– திருமலை, சமூக ஆர்வலர், பிசிண்டி.

Related posts

Leave a Comment