இருதயம் செயலிழப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு தென்கிழக்கு ஆசியா (ம) மத்திய கிழக்கு நாடுகளில் முதன் முறையாக பீடியாட்ரிக் இருதய அறுவை சிகிச்சையை (Biventricular Berlin Heart Implantation) வெற்றிகரமாக மேற்கொண்ட MGM Health Care, மருத்துவமனையின் மருத்துவர்களுடன் இன்று (27.7.2020) காணொளிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினேன்.Biventricular Berlin Heart Implantation அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் இம்மருத்துவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
2. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (குரூப் – 1) மூலமாக காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 90 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் மாவட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 3 நபர்களுக்கும் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினேன்.


