ராஜஸ்தானில் திடீர் திருப்பம்- சட்டசபையை கூட்ட அழைப்பு விடுத்தார் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் கடும் நெருக்கடியை தொடர்ந்து மாநில சட்டசபையை கூட்டுவதற்கான முறையான அழைப்பை அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா வெளியிட்டுள்ளார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உட்பட 19 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இந்த 19 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் சபாநாயகர் சிபி ஜோஷியின் நடவடிக்கைகளுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த தடை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிபி ஜோஷி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளார்.

ராஜ்பவன் போராட்டம் இதனிடையே கொரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும்; ஆகையால் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் கெலாட் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜ்பவனிலேயே போராட்டமும் நடத்தினர்.

ஆளுநர் பிடிவாதம் ஆனாலும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அசைந்து கொடுப்பதாக இல்லை. இதனையடுத்து வரும் 31-ந் ச்தேதி சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்று ஆளுநருக்கு முதல்வர் கெலாட் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் கோப்புகளை அனுப்பியது. ஆனாலும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவோ, இந்த கோரிக்கையை ஏற்காமல் அமைச்சரவை கோப்புகளை திருப்பி அனுப்பினார்.

கடுப்பான கெலாட் இதனால் கடுப்பாகிப் போன முதல்வர் கெலாட், பிரதமர் மோடியிடம் முறையிட்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் முறையிட மனுவையும் தயார் செய்தார். அத்துடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தேவையில்லாத அரசியல் சாசன நெருக்கடிகளை உருவாக்க வேண்டாம் என்றும் கல்ராஜ் மிஸ்ராவுக்கு கடிதம் அனுப்பினர். இதனால் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது

சட்டசபை கூட்டத்துக்கு அனுமதி இந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் சட்டசபையை கூட்டுவதற்கான அழைப்பை விடுத்துள்ளார் கல்ராஜ் மிஸ்ரா. சட்டசபை கூட்டத்தை தாமதப்படுத்த வேண்டும்; கூட்டக் கூடாது என்ற உள்நோக்கம் இல்லை; கொரோனா காலத்தில் எம்.எல்.ஏக்கள் எப்படி சட்டசபைக்குள் வருவார்கள் என்கிற தயக்கம் இருந்ததாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment