பயம் வேண்டாம்.. ஆயுர்வேத சிகிச்சை மூலம் கொரோனாவில் இருந்து மீண்டது இப்படித்தான்.. விஷால் விளக்கம்

சென்னை: கொரோனாவில் இருந்து தானும் தனது தந்தையும் மீண்டது எப்படி என்று நடிகர் விஷால் விளக்கி உள்ளார். தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

சென்னை: கொரோனாவில் இருந்து தானும் தனது தந்தையும் மீண்டது எப்படி என்று நடிகர் விஷால் விளக்கி உள்ளார். தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

அது உண்மைதான் அவர்கள் சிகிச்சை எடுத்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர். இப்போது குணமடைந்து விட்டனர். இது பற்றிய செய்தி பரவியதை அடுத்து நடிகர் விஷால், உண்மைதான் என்று உறுதிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் தாங்கள் குணமடைந்தது எப்படி என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது.

முதலில் தந்தைக்கு இந்த இக்கட்டான சூழலில் எப்படி மீண்டு வந்தோம் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதில் எந்த வகையிலும் தவறில்லை. என் தந்தைக்கு முதலில் கொரோனா தொற்று உறுதியானது. நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. நான் எந்தவொரு மருத்துவமனைக்கும் எதிரானவன் அல்ல. அதனால் யாரும் தவறாக நினைக்க வேண்டாம். வீட்டிலேயே கவனித்துக்கொண்டேன்.

அதிகமான காய்ச்சல் என் அப்பாவைக் கவனித்துக் கொள்ளும்போது, எனக்கும் கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அதிகமான காய்ச்சல், சளி, இருமல் இருந்தது. நான் யாரிடமும் இதைச் சொல்லவில்லை. நான் ஆயுர்வேத மாத்திரை எடுத்துக்கொண்டேன். என்னுடைய மானேஜர் ஹிரிக்கும் கொரோனா அறிகுறிகள் தெரியத் தொடங்கின. உடனடியாக ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருந்துகள் எடுத்துக்கொண்டோம்.

ஆயுர்வேத மருந்துகள் அதன் மூலம் நான்கு நாட்களில் காய்ச்சல் குறையத் தொடங்கியது. 7 நாட்களில் முழுமையாகக் குணமாகிவிட்டோம். ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணமானேன் என்பதை அந்த மருந்துகள் விற்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. எப்படி குணமானேன் என்பதை தெரிய படுத்த வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்

பயம் வேண்டாம் மருத்துவர்களை நான் கடவுளாகப் பார்க்கிறேன். கொரோனா தொற்று ஏற்பட்டாலோ அல்லது வந்துவிடுமோ என்று முதலில் பயப்படாதீர்கள். அதுதான் முதல் மாத்திரை. இந்தப் பயம் மட்டுமே பாதிப் பேரை இக்கட்டான சூழலில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கொரோனாவுக்கு முக்கியமான மருந்தே முதலில் பயப்படாதீர்கள். மன தைரியம் இருக்க வேண்டும். அந்த தைரியத்துடன் மருந்துகள் எடுத்துக் கொண்டால், கண்டிப்பாகக் குணமாகும்.

குணமடைந்தோம் அப்படித்தான் 82 வயது நிரம்பிய என் தந்தை குணமானார். அவருடைய மன உறுதியினால் மட்டுமே எனக்கு வந்த தொற்றையும் எதிர்கொண்டேன். என் தந்தை, நான், மானேஜர் ஹரி மூவருமே கொரோனா தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு குணமடைந்தோம். எங்களால் யாருக்குமே பாதிப்பு இல்லாமல், இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டோம். இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment