சென்னை கலெக்டர் சீதாலட்சுமி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா உறுதி

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் 6500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தலைநகர் சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் சுமார் 54 ஆயிரம் பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்று அரசியல்வாதிகள் தொடங்கி சமானியர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. அமைச்சர்கள் தொடங்கி பல எம்எல்ஏக்ககள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதேபோல் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா ஆகியோரையும் கொரோனா பாதித்தது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருண்ணனின் குடும்பத்தினரையும் அண்மையில் தொற்று தாக்கியது. டாக்டர்கள், போலீஸ்…

Read More

5,000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை… ஈர நெஞ்சம் படைத்த எவரும் ஏற்காத செயல் -தங்கம் தென்னரசு

சென்னை: முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்த 5000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைக்கு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கல்வித்துறை கருணையற்ற துறையாக மாறிவிடக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். 5000 ஆசிரியர்கள் முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்துவிட்டதாகக் கூறி, ஏறத்தாழ 5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. ஆசிரியர்கள் கூடுதலாகக் கல்வி கற்றுவிட்டார்கள் என்று காரணம் சொல்லி, அவர்கள் மீது கல்வித்துறையே நடவடிக்கை மேற்கொள்வதென்பது ஒரு வகையில் நகை முரணாகத் தோன்றினாலும், அவர்கள் அதற்கான முன் அனுமதியினைத் துறையிடம் இருந்து பெறவில்லை என விதிகளைச் சுட்டிக்காட்டி, இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைவது வேதனையானது, கண்டிக்கத்தக்கதாகும். அதிர்ச்சி அளிக்கிறது உண்மை என்னவென்றால், அனுமதிக்காக ஆசிரியர்கள் விண்ணப்பித்து, அதன்…

Read More

சென்னையின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை.. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

சென்னை: சென்னையில் பல பகுதிகளில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் காலை முதலே வெயில் சுட்டெரித்தது. அவ்வப்போது மேகமூட்டமாக காணப்பட்டாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.இந்நிலையில் பிற்பகலுக்கு பிறகு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது. சென்னையில் பலத்த மழை சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம், வடபழனி, கேகேநகர், ஈக்காட்டுத்தாங்கள், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கனமழை இதேபோல் புறநகர் பகுதியான மீனம்பாக்கம், பம்மல், தாம்பரம், சேலையூர், மாடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. மேடவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூரிலும் மழை பெய்து வருகிறது. கொட்டி தீர்க்கும் மழை…

Read More

மேற்கு வங்கத்தில் ஆக.31 வரை.. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே லாக்டவுன்.. முதல்வர் மம்தா அதிரடி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே இனி லாக்டவுன் கடைபிடிக்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14லட்த்து 93 ஆயிரத்தை கடந்துவிட்டது. இன்று இரவுக்குள் 15லட்சத்தை தொட்டுவிடும் என தெரிகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு வரும் 31ம்தேதியுடன் நிறைவடைகிறது. மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தெரிகிறது. ஆனால் பல மாநிலங்கள் ஊரடங்கை ரத்து செய்ய விரும்புகின்றன. கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ஊரடங்கு இனி கிடையாது என்று அறிவித்துவிட்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த சில வாரம்முன்பு ஊரடங்கை நீடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வரும் ஆகஸ்ட் 31 வரை இனி வாரத்திற்கு 2…

Read More

விவசாயிக்கு டிராக்டர்…காய்கறி விற்ற பட்டதாரி பெண்ணுக்கு வேலை…அசத்தும் சோனு சூட்!!

ஐதராபாத்: கொரோனாவால் வேலையிழந்து குடும்பத்தைக் காப்பாற்ற காய்கறி விற்று வந்த தெலங்கானாவைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கு நடிகர் சோனு சூட் வேலை வாய்ப்பு வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக ஆந்திராவில் விவசாயி ஒருவருக்கு இலவசமாக டிராக்டர் வழங்கி இருந்தார். தெலங்கானாவில் வாரங்கல் என்ற இடத்தைச் சேர்ந்தவர் உன்தாதி சாரதா. இவர் தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். எம்என்சி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். வயது 26. பணிக்கு சேர்ந்த மூன்று மாதங்களில் கொரோனா காரணமாக தனது வேலையை இழந்தார். குடும்பத்துக்கு வேறு வருமானம் இல்லை. தந்தையுடன் காய்கறி விற்பனை இந்தச் சூழலில் தனது தந்தையுடன் காய்கறிகள் வாங்கி தனது தந்தையுடன் ஸ்ரீநகர் காலனியில் சாரதா விற்று வந்தார். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து, தனது தந்தையுடன் மார்க்கெட் சென்று காய்கறிகளை வாங்கி வந்து, 12 மணி…

Read More

சசீந்திரன் முத்துவேல்

சசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர் – சாத்தியமானது எப்படி?பப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட சசீந்திரன் முத்துவேல் பதவியேற்றுள்ளார்.பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடைப்பட்ட நீர்ப்பரப்பில் அமைந்துள்ள 16 தீவு நாடுகளில் மிகப் பெரிய நாடாக விளங்கும் பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சராக பதவியேற்கும் முதல் தமிழர் மட்டுமல்ல முதல் இந்தியரும் சசீந்திரன் முத்துவேல்தான்.மத்திய அமைச்சராக 2019 ஜூன் 7ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்புவரை, இவர் அந்நாட்டிலுள்ள நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக ஆறாண்டுகளாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பட்டாசுக்கு பெயர்போன சிவகாசியில் பிறந்து, தமிழ்வழியில் பள்ளிக் கல்வி முடித்து, கல்லூரியில் விவசாயம் படித்த சசீந்திரன், எப்படி பப்புவா நியூ கினி எனும் தமிழர்களுக்கு பரீட்சயமற்ற நாட்டின் மத்திய அமைச்சராக உயர்ந்தார்…

Read More

🔴⚪ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான மதிப்பெண் கணக்கீடு அறிவிப்பு

முதன்மைப் பாடங்களுக்கு கடந்த செமஸ்டரின் இண்டர்னல் மதிப்பெண்களில் இருந்து 70 சதவீதமும், அதற்கு முந்தைய செமஸ்டர் முடிவில் இருந்து 30 சதவீதமும் மதிப்பெண்கள் வழங்கப்படும். 🔲இதேபோல் துணைப்பாடங்கள், விருப்பப் பாடங்களுக்கு முழுவதும் இண்டர்னல் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். இண்டர்னல் மதிப்பெண் இல்லாதவர்களுக்கு ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளது.

Read More