கொரோனா வார்டில் சீர்கேடு

‘வாட்ஸ் ஆப்’பில் பரவியதால் நடவடிக்கை விருதுநகர்:விருதுநகர் அரசு மருத்துவமனை செவிலியர் பள்ளி கொரோனா வார்டில் தண்ணீர் பற்றாக்குறையால் கடும் துர்நாற்றம் ஏற்படுவதை ‘வாட்ஸ்ஆப்’பில் வைரலாக பரவ இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இங்கு தொற்றால் பாதித்த 150 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

நோயாளிகள் எண்ணிக்கை ஏற்ப கழிப்பறை, குளியறை வசதிகள் இல்லை. குளியறையில் தண்ணீர் பிடித்து சென்று கழிப்பறையில் பயன்படுத்தும் நிலை இருந்தது. தண்ணீர் பற்றாக்குறை நிலவும் நிலையில் அடுத்தடுத்து நோயாளிகள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத திக்குமுக்காடினர். வேறு வழியின்றி பொது கழிப்பிடம் போல் தண்ணீர் இல்லாமலேயே பயன்படுத்தினர். இதனால் அதன் வளாகம் முழுவதும் கடும் துர்நாற்றம் உருவானது .

இதன்அவலம் குறித்து வாட்ஸ்ஆப் மூலம் சிலர் வீடியோ வெளியிட்டனர். இது வைரலாக பரவ சுமித் எனும் தனியார் நிறுவனம் கழிப்பறை, குளியலறைக்கு தனித்தனியாக தண்ணீர் இணைப்பை கொடுத்து பிரச்னைக்கு தற்காலிகமாக முடிவு கண்டனர். நோயாளிகள் நலன் கருதி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து துாய்மைப்பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

Related posts

Leave a Comment