பயத்தை தவிர்த்தாலே போதும் தொற்றால் குணமடைந்தவர் அறிவுரை

ஸ்ரீவில்லிபுத்துார்:மாவட்டத்தில் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மனப்பயம் வேண்டாம் என தொற்று பாதித்து குணமடைந்து வீடு திரும்பிய ஸ்ரீவில்லிபுத்துார் வடக்குரத வீதியை சேர்ந்த தொழில் முனைவர் பாலு கூறினார்.

அவர் கூறியதாவது: கொரோனா பாதித்து கிருஷ்ணன்கோவில் தனியார் கல்வி நிறுவன சிகிச்சை மையத்தில் தங்க வைக்கபட்டேன். தினமும் சுகாதார சத்து உணவுடன் டாக்டர்கள் பரிசோதனை செய்கின்றனர். வேறு ஏதாவது பிரச்னை இருந்தாலும் அதற்குரிய சிகிச்சையளிக்கிறார்கள். எந்நேரமும் அலைபேசி பயன்படுத்தி கொள்ளலாம் என்பதால் உறவினர்கள், நண்பர்களுடன் பேசிக்கொள்ள முடிந்தது.

சமூக வலைதளங்களை பயன்படுத்தி வெளி உலக விபரங்களை அறியமுடிந்தது. முதலில் அழைத்து செல்லும்போது என்னவோ ஏதோ என நினைத்தேன். ஆனால் அங்கு சென்றபோது எவ்வித பயமும் தெரியவில்லை. தொற்று ஏற்பட்டால் யாரும் பயப்படத்தேவையில்லை. மனதைரியம், இறைநம்பிக்கை இருந்தால் போதும் 5 முதல் 7 நாட்களுக்குள் வீடு திரும்பலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டாலே தொற்று ஏற்படாது என்பதை உணர்ந்தேன், என்றார்.

Related posts

Leave a Comment