சென்னை கலெக்டர் சீதாலட்சுமி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா உறுதி

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினமும் 6500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தலைநகர் சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் சுமார் 54 ஆயிரம் பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அரசியல்வாதிகள் தொடங்கி சமானியர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. அமைச்சர்கள் தொடங்கி பல எம்எல்ஏக்ககள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதேபோல் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா ஆகியோரையும் கொரோனா பாதித்தது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருண்ணனின் குடும்பத்தினரையும் அண்மையில் தொற்று தாக்கியது. டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் கமிஷ்னர் வரை பலரையும் பாதித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் முன்கள வீரராக பணியாற்றிய சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி கிண்டி கிங் இன்ஸ்டியூட் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகிறார். இதேபோல் . மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related posts

Leave a Comment