பழமையை நோக்கி உணவு பதார்த்தங்கள்

விருதுநகர்

‘உளுந்தங்களி’ இதை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இதை சமைத்து குடும்பத்துடன் உண்ணும் பழக்கம் முன்பு வழக்கமாக இருந்தது. தோல் நீக்கிய உருட்டு உளுந்தம் பருப்பை நன்கு ஊறவைத்து உறலில் இட்டு ஆட்ட நன்கு மாவானதும் மண்பானையில் பக்குவமாக வேக வைத்து நல்லெண்ணெய், நாட்டு வெல்லம் பாகுடன் கலந்து காலை வேளைகளில் சூடாக உண்பர். இதை சாப்பிடுவோருக்கு வயிற்றுப்புண், வாய்ப்புண், கை கால் மூட்டு வலி, இடுப்பு வலி பஞ்சாக பறந்து போக வைக்கும் வல்லமை இதற்கு உண்டு.

ஒரு காலத்தில் பழைய சோறு, மோர், நார்த்தங்காய் ஊறுகாய் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். இப்பழக்க வழக்கம் காலப்போக்கில் மலையேறி காணாமல் போய் விட்டது. இவை தற்போது நட்சத்திர ஓட்டல்களில் முக்கிய ‘மெனு’களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. பண்டைய உணவுகளை மீண்டும் உண்ணும் பழக்கத்தை நாகரீகமாக கருதும் இந்நாளில் உளுந்தங்களியும் இதன் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

பழமை மாறாமல் உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்தம்களியை தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப சற்று உருமாற்றி விருதை உளுந்து அல்வா’ எனும் பெயரில் சுவையாக தயாரித்து தருகிறார் விருதுநகர் குல்லுார்சந்தை கிருஷ்ணமூர்த்தி. ஆர்டரின் பேரில் தயாரித்து தென் மாவட்டங்களுக்கு டோர்டெலிவரி செய்கிறார்.

அவர் கூறியதாவது: ஒரு கிலோ உளுந்து மாவில் ஒரு கிலோ நாட்டு வெல்லம், 500 மில்லி செக்கு நல்லெண்ணெய், 100 கிராம் முந்திரிப்பருப்பு (நெய்யில் வறுக்கப்பட்டது) ஆகிய கலவையில் உளுந்து அல்வா தயாரிக்கிறோம். 100 கிராம் பொட்டலம் ஒன்று ரூ.24க்கு விற்கிறேன். இது ஒரு வாரத்திற்கு கெடாது. சுட வைத்து உண்ண வேண்டியதில்லை. எப்போது உண்டாலும் சுவையாக இருக்கும். இதன் சுவையும், மனமும் உண்ண உண்ண திகட்டாது. ஆர்டரின் பேரில் டோர்டெலி செய்கிறேன். இது இங்கு மட்டுமே தயாராகிறது, என்றார். இதை சுவைக்க 90472 75222.

Related posts

Leave a Comment