குடிநீர் பற்றாக்குறையில் ஸ்ரீவி.,: வேண்டும் புதிய குடிநீர் திட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்:தாமிரபரணி குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் வழங்கபடாததால் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி பகுதி மக்கள் தண்ணீருக்கு சிரமபடுகின்றனர்.

இதை தவிர்க்க இங்கு தனிகுடிநீர் திட்டம் அவசியமாகிறது.இந்நகரின் முக்கிய நீர்ஆதாரமாக செண்பகதோப்பு பேயனாறு இருந்த நிலையில் 2011க்கு முன்பு வரை மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்தது. தாமிரபரணி குடிநீர் திட்டம் என்று அமல்படுத்த பட்டதோ அன்று முதல் செண்பகதோப்பு பேயனாறு நீராதாரம் பராமரிக்காமல் பயனற்று போனது.

தாமிரபரணி திட்டத்தில் ஒருவருக்கு தினமும் 90 லிட்டர் வீதம் தண்ணீர் தேவையை கணக்கில் கொண்டு நாளொன்றுக்கு 54 லட்சம் லிட்டர் தண்ணீர் வரவேண்டிய நிலையில் வறட்சி காலங்களில் 20 லட்சம் , மழைகாலங்களில் 45 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வருகிறது. இதைகொண்டு தான் குடிநீர் விநியோகம் நடப்பதால் பற்றாக்குறை தொடர்கிறது. இது நகரின் அனைத்து தரப்பு மக்களுக்கும் தாங்கமுடியாத பிரச்னையாகவே நீடித்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண பேயனாற்று தண்ணீர் சப்ளையை துவங்க வேண்டும்.

Related posts

Leave a Comment